உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் 37

வேண்டியிருக்கிறது. தங்கள் தங்கள் ஊருக்கு வந்து, சில தினங்கள் தங்களோடு தங்கவேண்டும் என்று கோருகிற-திரும்பத் திரும்ப எழுதுகிற-நண்பர்களின் ஊர்களுக்குப் போகவேண்டும். ராஜவல்லி புரத்தில் சில மாதங்கள் தங்கி சில முக்கிய வேலைகளை முடிக்க வேண்டியிருக்கிறது. எனவே, ஜனவரியிலிருந்து என்னை நியூஸ் வேலைக்குக் கூப்பிடாது எனக்கு விடுதலை தந்து உதவும் படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

அன்பு

థ, థీ.

ராஜவல்லிபுரம் 2-3-39.

அருமை நண்பர் அவர்களுக்கு,

வணக்கம்.

பிப்ரவரி 10 இரவில் நான் சென்னையைப் பிரிந்தேன். 11-12 சிவகாசியில். அங்கே சிறுபத்திரிகையாளர் சங்கம் ஆண்டு விழா நடந்தது. ராஜநாராயணனும் வந்திருந்தார். 13ல் நானும் ஞானன் என்ற எழுத்தாளரும் கழுகுமலை போய், அங்கே மலைக்குள் வெட்டப்பட்டிருக்கும் சிறு கோயிலையும் சிற்பங்களையும் பார்த்தோம். சமணர் காலத்தியவை என்ற வரலாற்றுப் பெருமை தவிர, சிறப்பு அம்சம் எதுவும் இல்லை. 14 முதல் 17 முடிய விருதுநகரில் நண்பர்களோடு. 18-19 மறுபடி சிவகாசி. கலை இலக்கியப் பெருமன்றத்தின் சிறுகூட்டம் 19அன்று. 20ல் விருதுநகர். 2iல் ராஜவல்லிபுரம் சேர்ந்தேன். உடனேயே திருநெல்வேலி போனேன். அன்று தான் தி.க.சி. சென்னைக்கு புறப்பட்டார். ரயிலி ல் அவரை வழி அனுப்பினேன். பின்னரும், பாளையங்கோட்டை-திருநெல்வேலி என்று போய் வர நேரிட்டது. பாக்கியமுத்து வீட்டில் சனிக்கிழமை நண்பர் வட்டம் கூட்டம் நடந்தது. ரகுநாதன் கவிதை பற்றி ஆழ்ந்த, இனிய, சொற்பொழிவு நிகழ்த்தினார். சுவாரஸ்யமாக 2 மணி நேரம் பேசினார். கேட்டவர்கள் 15 பேர்தான்.

21 முதல் இவ்வூரில். மார்ச் பூராவும் இங்கே தான். தாமிரவர்ணியில் தண்ணிர் குறைவாகத் தான் போகிறது. ஆனாலும் குளிப்பதற்கு ரொம்ப சுகம். காலையிலும் மாலையிலும் ஆற்றுக்குப் போய் வருகிறேன்.