பிற்சேர்க்கை 2 விநாயகர் அகவல் (மூலம்) “சீதக் களபச் செந்தாமரைப்பூம் பாதச் சிலம்பு பல இசை பாடப் பொன் அரைஞானும், பூந்துகில் ஆடையும் வன்ன மருங்கில் வளர்ந்து அழகுஎறிப்பப் பேழை வயிறும், பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்கு சிந்துரமும், அஞ்சு கரமும், அங்குச பாசமும், நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும், நான்ற வாயும், நால்இரு புயமும், மூன்று கண்ணும், மும்மதச்சுவடும் இரண்டு செவியும், இலங்குபொன் முடியும், திரண்ட முப்புரிநூல் திகழொளி மார்பும், சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ்ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிறே! முப்பழம் நுகரும் முஷிக வாகன: இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டி தாயாய் எனக்குத் தான் எழுந்து அருளி மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே, திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப் ப்ொருந்தவே வந்துஎன் உளம்தனில் புகுந்து குருவடிவு ஆகிக் குவலயம் தன்னில் திருவடி வைத்துத் திறம்இது பொருள் என வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கு அருளிக் கோடாயுதத்தாற் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி, ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் இன்புறு கருணையின் இனிதெனக்கு அருளிக் கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து, இருவினைதன்னை அறுத்துஇருள் கடிந்து | 0 15 20 25 30 31
பக்கம்:பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்.pdf/48
Appearance