இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பிற்சேர்க்கை 3 37 10. எவை எல்லாம் செய்தோம், எவை எல்லாம் செய்வோம் 11, அவை எல்லாம் எம் செயல்கள் அல்ல - சிவை பாலா அத்துணையும் நின் செயலே! அப்பலனும் நினககேதான் முத்தி அருள் வேழ முகா! பெருவரங்கள்தரும் தேசி விநாயகப் பிள்ளையார் பாதம் பணிந்து திருவீங்கைக் குடி மகாதேவர் அவர் திருத்தாள்கள் வணங்கி, மேலும் அருள் மருதங் குடி நாயனார்.அவர்தம் அடிமலர்கள் சேவித்து, என்றும் மருள்கடிந்த சிவகாமியொடுவாடா மலர் மங்கை அருள் கொள்வோமே!