துணிந்தவன் அழகை அள்ளிப் பொழிந்து கொண்டிருந்தது நிலவு. உள் ஊழல்களை எல்லாம் அலங்கார ஆடை களாலும் மேல் பூச்சுகளாலும் மூடி மறைத்து வெளிச்சம் போடும் வீணர்களையும் ஒய்யாரிகளையும் போலவே, சந்திரிகையைப் போர்த்துக் கொண்டு சொகுசாக விளங் கியது உலகம். அன்று பெளர்ணமி. 'புத்தனாகப் பரிணாமம் பெறுவதற்கிருந்த சித்தார்த்தன் இத்தகைய பெளர்ணமி இரவு ஒன்றிலேதான் வெளியேறினான். மோகனச் சூழ் நிலை யில், சந்திரனின் அமுத ஒளியில் குளிக்கும் கல் சிலையென் அமர்ந்திருந்த மாதவ னின் உள்ளம் பேசியது இப்படி, உடனே சிரித்தது. அவன் மனக்குறளி. புத்தனையும் உன்னையும் ஒப்பிடாதே, உன்னோடு எவனையுமே ஒப்பிடாதே. நீ நேர்ந்திருப்பது - துணிந்து நடைபோடப் போவது ஒற்றைத் தனிப் பாதை யாகும்.... அழகு போர்த்திய உலகம் அமைதியில் உறங்கிக் கிடந்தது. விண்ணும் மண்ணும், ஆசைநாயகன் எவனுக் காகவோ சிங்காரித்துக்கொண்டு காத்திருக்கும் மோகினிகள் மாதிரித் திகழ்ந்தன. ஊருக்கு வடக்கேயுள்ள குளத்தின் கரைமீது ஆழ்ந்த யோசனையில் லயித்திருந்த மாதவன் கண்கள் கூட
பக்கம்:துணிந்தவன்.pdf/13
Appearance