2. துணிந்தவன் கல்வி கற்பிக்கவும் நல்ல துணைவராக உதவவும் ஒருவர் தேவை; தங்கும் இடம், உணவு முதலிய வசதிகளும் படும் என்று கூறியது அது. ஆகா, இதைவிட நல்ல வாய்ப்பு நமக்கு எங்கே எதிர்ப்படப்போகிறது? பணக்காரர் தன் பையனுக்குக் கல்வி புகட்ட விரும்புவது நியாயம். ஆனால் அவனுக் கோர் நண்பனாய், ஞானாசிரியனாய், வழிகாட்டியாய் விளங்கக்கூடிய ஒருவனைக் கூலிக்குப் பிடிக்க விரும்பு கிறாரே அவர்; பணச்செருக்குதானே காரணம்! என எண்ணி ாைன் அவன். 'காரணம் எதுவாக இருந்தால் நமக்கு என்ன? இந்த வேலை எனக்குக் கிடைத்தால், அதை முதல் படியாகக் கொண்டு மேலே முன்னேற முயற்சிக்கலாமே என்று தீர்மானித்தான் அவன். குறிப்பிடப்பட்ட விலாசத்தைத் தேடிச் சென்றான்.
மாதவன் சந்தித்த பெரிய மனிதர் பவானந்தம் வசதிகள் பலவும் படைத்தவர். அவருடைய பண மதிப்பு அவர் தோற்றத்திலும் பார்வையிலும் பேச்சிலும் விளம்பர மாகிக்கொண்டிருந்தது. அவர் வீடு பெரிதாய் விசாலமாய் அமைந்திருந்தது. முன்புற கேட்டிலிருந்து, வீட்டுக்குச் செல்ல ஒரு பர்லாங் தூரத்திற்கு அருமையான பாதை. அதன் இரு புறங்களிலும் பூத்துக் குலுங்கும் மலர்ச் செடிகள். அதை ஒட்டிய தோட்டத்தில் கண்ணுக்குக் குளுமை தரும் வகை வகையான பூச்செடிகளும், வெறும் இலை அடர்ந்த செடி களும் தளதளவென்று நிமிர்ந்து நின்றன. 'இவ்வீட்டில் பஞ்சத்தின் சாயைகூடப் படியாது என்றே தோன்றுகிறது என நினைத்தான் மாதவன்.