பக்கம்:துணிந்தவன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் #9 துணிச்சலே துணையாக; பொங்கிப்பெருகும் வெறுப்பே துணிச்சலுக்குரிய ஜீவசத்தாக! 莎 மாதவன் பட்டணம் வந்து சேர்ந்தான். - 'கெட்டும் பட்டணம் சேர்’ என்பது மட்டுமே சரியென்றில்லை. கெடுவதற்கும், வேறு பலரைக் கெடுப்ப தற்கும், பட்டணம் சேர்வதும் முறையேயாகும். அவனுடைய திட்டத்தை அமுல் நடத்துவதற்கு முதலில் எந்தத் துறையில் பிரவேசிப்பது என்று புரிய வில்லை அவனுக்கு. நாளாவட்டத்தில் சகல துறை களிலும் தனது ஆட்சியை நிலைநாட்டுவது என்ற பரந்த லட்சிய்ம் அவனுக்கு இருந்தது. ஆயினும், ஆரம்பத்தில் அடி பதிப்பதற்கு ஒரு சிறு இடமாவது வேண்டாமா? 'ஏதாவது கிடைக்காமலா போகும் பார்த்துக் கொள்ளலாம் என்ற தெம்புடன் கிளம்பினான் அவன். அவனிடம் கொஞ்சம் பணம் இருந்தது. பட்டினி கிடக்கக் கூடிய சக்தியும் பழக்கமும் இருந்தன. 'எப்படியும் ஒரு மாதத்தை ஒட்டிவிடலாம். அதற்குள் நிச்சயமாக ஒரு வாய்ப்பு ஏற்பட்டே தீரும் என்ற நம்பிக்கையும் அவனுள் ஓங்கி வளர்ந்தது. துணிந்து விடுகிறவர்களுக்கு அதிர்ஷ்டமும் துணை புரியும் என்று சொல்கிறார்கள். சில சமயம் அது சரி என்றே தோன்றுகிறது. மாதவனுக்கும் அதிர்ஷ்டம் ஒரு சந்தர்ப் பத்தை உண்டாக்கிக் கொடுத்தது. தற்செயலாக அவன் பார்வையில் பட்டது பத்திரிகை விளம்பரம் ஒன்று. பணக்காரர் ஒருவரின் செல்வ மகனுக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/31&oldid=923503" இலிருந்து மீள்விக்கப்பட்டது