பக்கம்:துணிந்தவன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$3. துணிந்தவன் அவரவர் கவலையே பெரிதாய், அவரவர் காரியமே முக்கியமாய்ச் செயல்புரிகிறார்கள். அவன் கத்துகிறான். அலறுகிறான். அவனைப் பரிகசிப்பதுபோல் காற்று ஒல. மிடுகிறது. அவனைக் கேலி செய்வதுபோல் அலைகள் அவன்மீது மோதி, மூஞ்சியில் அறைந்து ஆர்ப்பரிக்கின்றன. கப்பல் துர துர துரமே செல்கிறது. கண்ணுக்குச் சிறிதாகி, புள்ளிபோல் மங்கி, மறைந்தே போகிறது. அவன் அந்தத் தனி மனிதன் - குளிர்ந்த கருமையான - டிப்புச்சுவையே மிகுந்த வெறிபிடித்த தண்ணிரிலே, செயல் றம் இழந்த சுண்டெலிபோல், கிடந்து தவிக்கிறான். உலகமெனும் கடலிலே, வாழ்க்கைக் கப்பலில், ராணியற்ற தனி மனிதர்களுக்கு இத்தகைய கவனிப்பு தான் கிடைக்கிறது. தளத்திலே தம் கவலையே பெரிதாகித் தம்மிலே தாமே ஆழ்ந்து விளங்கும் ஜனக்கூட்டம்தான் சமூகம்.... இதை நினைக்கும் போதெல்லாம் மாதவனுக்கு, நீர் வெளியிலே நிலையற்றுத் திண்டாடும் அப்பாவி தானேதான் என்ற எண்ணமே படரும். உடனே அவ னுடைய வெறுப்பு மிகுந்த வலிமைபெறும். 'நமது வாழ்க்கையைத் தனியொரு கப்பலாக மாற்றுவோம். அது வெறும் கப்பலாக இராது. வியாபாரக் கப்பலாகவோ, கொள்ளைக் கப்பலாகவோ விளங்காது. இதர கப்பல்களை மூழ்கடிக்கும் போர்க்கப்பலாக - வலு மிகுந்த நீர்மூழ்கியாக முன்னேறும் என்று அவன் நெஞ்சோடு கிளத்துவதும் உண்டு. வேளை வரவில்லை இன்னும் வேளை வர வில்லை என்று காத்திருந்த மாதவன், உரிய காலத்தைக் கணித்துக் கொண்டான். கிளம்பி விட்டான், தனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/30&oldid=923502" இலிருந்து மீள்விக்கப்பட்டது