பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 8

11. தமிழ் தந்த வாய்ப்பு

do, ITரைக்குடி அழகப் பா கலைக் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, தமிழில் எம்.ஏ பட்டம் பெறவேண்டும் என்ற இலட்சியத்துடன் படித்துக் கொண்டிருந்தேன். முதல் மூன்று தாள்களும் எழுதி அதில் தேறிய செய்தியும் கிடைத்தபோது தான், வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்னைக் குப் புறப்பட்டு விட்டிருந்தேன்.

எனக் குத் தமிழ் இலக்கியம் தெரியாது என்று எகத்தாளமாகப் பேசிய தமிழ்த்துறை ஆசிரியர்களை, வாயடைக்கச் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடுதான் எம்.ஏ , தமிழிலக்கியம் படித்தேன். காரைக்குடியை விட்டு விட்டு, சென்னை வந்த பிறகு, அந்த படிக்கும் வேலை எதற்கு என்று நான் விலக்கி விடவும் இல்லை. விட்டுவிடவுமில்லை

தமிழ் இலக்கிய உணர்வு என்னிடம் இயல்பாகவே நிறைய இருந்தது. பள்ளியில், கல்லூரியில் படிக்கும்போது, சிறு சிறு கவிதை, கட்டுரை, ஒரங்க நாடகங்கள் எழுதி, மற்றவரிடம் படித்துக் காட்டி மகிழ்ந்தவன் நான்.

அந்தத் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என நான் ஆசைப்பட்ட போது, என் வாழ்க் கையில் நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் என் இலக்கிய வேட்கையை