பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
13

லாம் என்று,நாம் உணரும் வகையில் திரு மணவை முஸ்தபா அவர்கள் பல சொற்களை கலைச்சொல் அகராதிக் களஞ்சியத்தில் சேர்த்திருப்பது பாராட்டுதற்குரியது.

இந்த அகராதி களஞ்சியத்தொகுப்பை பயன்படுத்துவதில் பல அரிய வாய்ப்புகளும் சிந்தனைகளும் உருவாக வழியுண்டு.

1.தமிழில் மருத்துவ நூல்கள் எழுத வேண்டும் என்று நினைப்போர் பொருத்தமான தமிழ் மருத்துவக்கலைச் சொற்களைத் தேடிபல அகராதிகளை வைத்துக் கொண்டு நேரம் அனைத்தும் வீணாகாமல் இந்த நூலை அருகில் வைத்துக் கொண்டு விரைவாகக் கருத்துக்களுக்கு உரிய எழுத்து வடிவம் கொடுக்கமுடியும்.

சாதாரண அகராதிகளைப்போல் தமிழில் ஆங்கிலச் சொல்லுக்கு நேர்ச்சொல் மட்டும் தந்து பொறுப்பை முடித்து விடாமல்,அதன்பொருள் விளக்கத்தையும் சுருக்கமாகத் தந்திருக்கிறார் ஆசிரியர்.மருத்துவத் தமிழ்ச் சொல்லைத் தெரிந்து கொள்வதுடன் சாதாரண மக்கள் அறிவியல் செய்திகளையும் தெரிந்து கொள்ளப்பயன்படும் வகையில் தொகுத்திருக்கிறார்.எ.கா."Version" என்ற சொல்லுக்கு'நிலைதிருப்பம்’என்று மட்டும் சொல்லி நிறுத்திவிடாமல்,"மகப்பேற்று மருத்துவத்தில் குழந்தை எளிதாக வெளிவரும் பொருட்டு கருப்பைக்குள் குழந்தை கிடக்கும் நிலையை மாற்றி தலைப்பாகம் முதலில் வெளியேறுமாறு செய்தல்" என்று விளக்கம் தந்திருக்கும் பாங்கு மக்கள் எளிதில் தெரிந்துகொண்டு பொருளுடன், செய்தியையும் உணர்ந்து கொள்ள ஒரு கருவியாய் அமைகிறது.இந்நூல் இப்படி ஆசிரியர் விளக்கி இருப்பதால் எதிர்காலத்தில் சில நல்ல விளைவுகளை எதிர்பார்க்கலாம்.இப்படி தரப்பட்டிருக்கும் பல விளக்கங்களை படிக்கும் யாருக்காவது இதை விட சிறப்பான ஒரு தமிழ்ச் சொல்லை உருவாக்கக்கூடிய கற்பனை தோன்றும்போது தமிழுக்குப் புதுச் சொற்கள் சேரும்; தமிழ் வளம் பெறும்.

2. அகராதியைப் பயன்படுத்தும்போது அதில் தரப்பெற்றிருக்கும் சொல் பொருத்தமானதாக இல்லை எனறு ஒருவருக்குத் தோன்றினாலும் இருக்கும் சொற்களில் சிறு மாற்றங்கள் செய்து வலிமை தந்து சொல்லை ஏற்றம் பெறச் செய்யவும் வாய்ப்பிருக்கிறது

3. முழுவதுமாகவே ஒரு சொல் பொருத்தமற்றது என்று அதைத் தள்ளிவிட்டு சிறந்த ஒரு புதுச் சொல்லை உருவாக்க