பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



14

ஒரு சிலராவது முயல்வர். அதனாலும் தமிழுக்கு வளம் சேரும்.

எந்த வகையில் பார்த்தாலும் இதைப் பாராட்டுவோர் தொண்டாலும், குறைகூறுவோர் முயற்சியாலும் இறுதியில் மேலும் பல புதிய சொற்கள் உருவாகித் தமிழ் வளர வாய்ப்பாகும் என்ற ஒரு காரணத்திற்காகவே ஆசிரியரைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.

பழைய இலக்கியத் தமிழ், இன்றைய பழகு தமிழ்-இவை பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்போருக்கிடையே, புதிய தமிழ், நாளையத் தமிழ், அறிவியல் தமிழ் என்றெல்லாம் சிந்திப்போரும் சிலர் இருக்கிறார்கள். அவர்களில் திரு மணவை முஸ்தபா அவர்களை முதன்மையானவராகத் திகழ்கிறார் எனத் தயக்கமினறிச் சொல்லலாம்.

மருத்துவச் சொற்களை திட்ப நுட்பத்துடன் தமிழில் சொல்ல முடியும் எனக் காட்டியிருப்பதுடன்,சொற்செட்டுடன் பொருட் செறிவும் ஒருசேர அவற்றுடன் இலக்கிய மெருகும் ஏற்றி சுவைபட அறிவியல் செய்திகளைத் தமிழில் சொல்லலாம் என்பதற்கு இந்நூல் ஒரு எடுத்துக்காட்டு. மொழிக்கு மட்டும் முதன்மை தராமல் மருத்துவப் பொருளறிவை விளக்கவல்ல துணைக் கருவியாக மொழியைக் கையாளும் பாங்கால், மருத்துவச் செய்திகளை ஆற்றலுடன் ஆசிரியரால் விளக்க முடிகிறது. இதற்காகத் தவிர்க்க முடியாத இடங்களில ஆசிரியர் தனித் தமிழ் போக்கினைக் கூட நழுவ விடவேண்டிய நிலை உருவாகிறது.

மருத்துவப் பல்கலைக் கழகங்களும் வல்லுனர் குழுவும் செயல்பட்டு உருவாக்கப்பட வேண்டிய ஒரு கலைச் சொல் தொகுப்பு நூலை தனியொருவராக முயன்று,பாராட்டத்தக்க முறையில் நிறைவேற்றியிருப்பது தமிழரனைவர்க்கும் மகிழ்ச்சி தரக் கூடியது. துறை வல்லுனர்கள் கூட அவரவர் துறைகளில் தான் சிந்தனையாளராகத் திகழமுடியும். ஆனால் பல மருத்துவப் பிரிவுகளுக்கும் உரிய கலைச் சொல்லாக்கங்களை கண்டிருப் பதன் மூலம் இம்முயற்சியில் திரு மணவை முஸ்தபா அவர்கள் தமிழறிவுடன. மருத்துவ அறிவையும் எவ்வளவு ஆழ்ந்து நுணுகிக் கற்றுத் தேர்வுபெற்றுளளார் என்பது அனைவரையும் வியக்க வைக்கும்.

ஆங்கிலத்தில் இவ்வகையான அகராதி-களஞ்சிய நூல்கள் பல இருப்பினும் இந்திய மொழிகளுள் இதுவே முதலாவதான