பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

அதன் வெளிப்பாடான கருத்துகளும் வேறுபாடு காண, இயலா வண்ணம் ஒன்றுபோலவே அமைந்துள்ளன. அவர்கள் தங்கள் பாடல்களில் கையாண்டுள்ள சொல்லாட்சி யும் கூட ஒரே மாதிரி அமைந்து, உணர்வு ஒற்றுமைக்குக் கட்டியங் கூறுகின்றன.

        “அங்கு இங்கு எனாதபடி எங்கும் பிரகாசமாய்
        ஆனந்த பூர்த்தியாகி”

எனப் பாடுகிறார் தாயுமானவர்

        “அங்கும் இங்கும் என ஒண்ணா அகண்ட பரிபூரணமாய்
        எங்கு நிறைந்த இறையே நிராமயமே”

என முழங்குகிறார் குணங்குடி மஸ்தான்.

        “பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற
         நிறைகின்ற பரிபூரண ஆனந்தமே!”

என்கிறார் தாயுமானவர்.

        
        “பார்க்கும் இடம் எல்லாம் பரிபூரணமாக
        ஏற்கையுடன் நின்ற இயல்பே நிராமயமே!”

என்பது குணங்குடியார் பாடல்

இவ்வாறு சித்தர்களும் சூஃபிகளும் ஒரேவித உணர்வோடும் சிந்தனையோடும் ஏக தெய்வக் கொள்கையையும் சாதி, மதம் கடந்த சகோதரத்துவத்தையும் நிலைநாட்ட பெரிதும் முயன்றிருக்கிறார்கள்.

ஆன்ம நேய ஒருமைப்பாடு காணும் வள்ளலார்

சித்தர்களும் சூஃபிகளும் காண விரும்பிய ஓரிறை உணர்வடிப்படையிலான உலக சகோதரத்துவம் நிலைபெற, புகழ்மிகு சித்தரான திருவருட் பிரகாச வள்ளலார் சிதறுண்டு