உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முத்தம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

தது. அவள் பார்வை அவன்மீதே விளையாடியது. அவளை யுணராமலே பெருமூச்சு விட்டாள் அவள் அடிக்கடி. அவன் அழகு, அவன் தோற்றம் - நிலவிலே குளித்து மோகனமாக விளங்கும் அவனே -அவளை வாட்டி வதைப்பதை அவள் உணர்ந்தாள். அவன் உடலைத் தொடவேண்டும்; அவன் கன்னத்தை அன்பாக வருடவேண்டும்; அவனது மினுமினுக் கூந்தலிலே விரல்களை ஓடவிட்டு விளையாடி மகிழவேணும்; அப்படியே அவனை ஒரு முத்தம் இட்டால்தான் என்ன என்ற எழுச்சி பிறந்துகொண்டிருந்தது அவள் உள்ளத்திலே.

அவனுக்கும் அப்படித்தான். இன்ப நிலாச் சோறுபோல் அவள் இருந்தாள். ஆனால் அவளை அவன் தொடமுடியாது. தொடக்கூடாது என்று அவர்களது லட்சியக் கொள்கை தடை விதித்து விட்டது. அவனாக ஒன்றும் செய்யமுடியாது அவளை அணுகக்கூடாது. அவள் பட்டுக் கன்னத்தை வருடினால், அவளேயே கட்டியணைத்து முத்தமிட்டால் அப்பொழுதுதான் இந்த நிலவு வீண்போகாது. ஊம் என்ன பயன்!........ அவனும் எரிக்கும் நெடு மூச்செறிந்தான். தன்னை மறந்து கனவின் இனி மையிலே மயங்கிவிட, கட்டிலில் துவண்டு விழுந்து கண்களை மூடினான்.

அவனையே அவள் பார்த்தாள். உயிரோவியம்போல், பனிவண்ணப் பளிங்குச் சிலைபோல் கிடந்தான் அவன். அவன் முகத்தை, கருங்கூந்தலைத் தொட்டுத் தடவவேண்டும் எனும் ஆசையை அடக்க முடியவில்லை அவளால். ஆசை வெறியாகியது. நிலவும் காற்றும் இரவும் தங்கள் வேலையைச் செய்தன.

அவள் எழுந்து, மெதுவாக-அவன் விழித்து விடக்கூடாது என்று ஜாக்கிரதையாக-நடந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தம்.pdf/41&oldid=1663334" இலிருந்து மீள்விக்கப்பட்டது