உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10 வஞ்சம்



கிறது.அவ்வளவுதான்' என்று சொல்லிச் சிரித்தார் ஒண்டிப்புலி.

நிஜமாவா? பார்வையிலே அப்படித் தோணலியே. உயிருள்ளது போலவே இருக்குதே!' என்று முனங்கினர் எல்லைக்குநாதர்.

"என் பேச்சிலே உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? அது செத்த பாம்புதான்.வேணும்னா தொட்டு தூக்கிப் பார்க்கிறேளா? என்று கனைத்தார் மற்றவர்.

இன்ஸ்பெக்டர் 'வேண்டாம் வேண்டாம்" என்று மறுத்துவிட்டார்.

அதிலிருந்து பேச்சு பாம்புகளைப் பற்றித்தான் அடி பட்டது. ஒன்டிப்புலியா பிள்ளை பேச பேச பாம்புகளைப் பற்றிய விஷயத்தில் அவர் " ஒரு அத்தாரிட்டி' என்றுதான் பட்டது எல்லைக்கு நாதருக்கு. பாம்புகளைப் பற்றிய பல புத்தகங்கள் வைத்திருந்தார்.எல்லாவற்றையும் பெருமையோடு,இன்ஸ்பெக்டருக்கு காட்டி மகிழ்ந்தார்.

பண்ணையாரின் ஞானத்தை உணர்ந்த இன்ஸ்பெக்டர் பிரமித்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். விடை பெற்று பிரியும் போது அவருக்குக் கடமை உணர்ச்சி தலை தூக்கியது. பேச்சோடு பேச்சாகச் சொல்லி வைத்தார்.

"என்ன பண்ணையார்வாள், ரிப்போர்ட்டுகள் வரும் படி நீங்க ஏன் வழி வச்சுக்கிடனும்? உங்க எல்லையிலே குற்றம் ஜாஸ்தி இருக்கிறாப்லே தெரியுதே. நீங்களே கவனிச்சு ஒடுக்கி விடப்படாது?".