பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வஞ்சம் 9



ஒண்டிப்புலியைத் தன் வீடு தேடி வரவைக்கும் ஆற்றல் ஆவருக்கு இருந்தாலும், இன்ஸ்பெக்டர் அதை விரும்பவில்லை. வரச்சொல்லி ஆள் அலுப்பினால், அதைத் தவறாக எண்ணிக்கொண்டு பின்னயார் வராமலிருந்து விட்டால், அது தன்னை அவமதித்த செயலாகிவிடும் என்று நினைத்தார் எல்லைக்குநாதர். 'நாமாக அவனைத் தேடிப் போனால் அவன் உச்சந்தலையிலே வாரியலாலே அடிச்ச மாதிரி, குளிர்ந்து போகும். அவனைப் பற்றிய விஷயங்களே அதிகப்படியாக அறிந்து கொள்ளவும் முடியும்' என்ற நினைப்பு மிகுந்தது அவர் உள்ளத்தில்,

அவர் நினைத்தது சரியாகத்தான் இருந்தது. எதிர் பாராதபடி இன்ஸ்பெக்டர் தனது விடு தேடி விஜயம் செய்து தன்ன மிகுதியும் கெளரவித்துவிட்டதாகவே நம்பினார் பண்ணையார். உபசாரங்கள் செய்து தடபுடல் படுத்தினர்.

இரண்டு பேரும் தங்கள் மன ஆழத்தின் குமுறல்களை மேலெழவிடாது அமுக்கிவிட்டுச் சுமுகமாகவே பேசி மகிழ்ந்தார்கள். மலை, காடு, வேட்டை முதலிய பல விஷயங்களையும் தொட்டு வளர்ந்தது பேச்சு. தமது அனுபவங்களைப் பற்றிச் சுவையாக அளந்து தள்ளிக் கொண்டிருந்தார் ஒண்டிப்புலி. தமது பேச்சுக்கு ஆதாரமாகப் பெரிய பெரிய மான் கொம்புகள். மான் தோல்கள், மலை அணில் தோல், காட்டு எருமைக் கொம்புகள் முதலியவற்றை எல்லாம் காட்டினார்.

அவை ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த அறையில் ஒரு மூலையில், கண்ணாடிப் பெட்டியினுள் மிகவும் பெரிய பாம்பு ஒன்று சுற்றி வளைத்துச் சுருட்டிக் கொண்டு கிடந்தது. அதைப்பார்த்த இன்ஸ்பெக்டர் "யேப்பா! எவ்வளவு பெரிய பாம்பு!' என்று மலைத்தார்.

"அது உயிருள்ள பாம்பு அல்ல. செத்த பிறகு பதப்படுத்தி, உயிருள்ளது போல் பாவனைக்கு வைத்திருக்