உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொடு கல்தா.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-30- பிச்சை எடுப்பதையே கெளரவமான தொழிலாகக் கொண்டு விடுகிற தடிராமன்களை ஆதரிக்காதீர்கள். புது உலகத்திலே பிச்சை எடுக்கும் தொழிலுக்கு க ல் தா கொடுக்கவேண்டும். பொருளாதார சமத்துவமற்ற நாட்டிலே, தனியொரு சிலரை குட்டி முதலாளியாக மாற்றுவதற்கே பயன்படுகிற நிதி கொடுக்கும் பண்புக்கு கல்தா கொடுங்கள் ! விதி, கடவுள் சித்தம் என்பன போன்ற வார்த்தை களைச் சொல்லி ஊரை ஏமாற்றுகிற கயமைத்தனத்துக்கு கல்தா கொடுங்கள்,

இன்று நிலவுகிற கலை, சினிமா முதலியன மக்களின் காலத்தைக் களியாக்குவதோடு, சமுதாயத்தின் மனப்பண் பையே பாழ்படுத்துகின்றன. திறமையற்றவர்களும், பணமூட்டைகளும், அவர்களது அடிவருடிகளும் அந்தந்த துறைகளிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்.

புராணங்களும், கடவுளர் பெருமை பற்றி அளக்கும் கதைப்புகளும் சமுதாயத்தின் கருத்தை வளர்த்து, வாழ்வை அமைப்பதில் பங்குகொண்டது போதும்.இ னி யு ம் அவை மக்களின் மனதை கெடுக்க வேண்டாம். இனி அவை காட்சிசாலைகளில் மூல அலமாரியிலே வைத் து அடைக்கப்படத்தான் லாயக்கு. சினிமா, நாடகம், இலக் கியம், கல்வி, நூல் முதலியவைகளிலிருந்து அ வ ற் ைற அகற்றி விடுங்கள். பொதுவாக, சிறுமைகள் அனைத்துக்கும் க ல் தா கொடுத்து அனுப்புங்கள். கபாடபுரத்தை உண்ட கடலிலே இவையும் விழுத்து தொலையட்டும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடு_கல்தா.pdf/30&oldid=1396061" இலிருந்து மீள்விக்கப்பட்டது