உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொடு கல்தா.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 36 — கொடுக்க வேண்டும் என்பது பொதுவிதி. இந்தியாவிலும் நல்ல பண்புகள் வளரும் புதிய சமுதாயம் அமைக்கப்பட வேண்டியது அவசியம். உழைக்கும் திறமையும், சக்தியும், ஆர்வமும் உள்ள ஆண் பெண்கள் அனைவருக்கும் உழைக் கச் சந்தர்ப்பமும் இடமும் வசதியும் (சர்க்காரின் சேவை வாயிலாகவோ, அல்லது நாட்டு நிர்மாணப்பணிகள் வேறு எவற்றின் மூலமோ) கிடைக்க வகைசெய்ய வேண்டும். நாட்டுக்கு நலம் செய்ய விரும்புகிறவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள், எத்தகைய கொள்கை உடையவர்கள் என்று கவனிக்கக் கூடாது. அமெரிக்கன் சிறப்பாக வாழமுடிகிறது. இந்திய ரின் வாழ்க்கை வறண்டு வருகிறது. - காரணம் என்ன ? சமீபத்தில் இந்திய சர்க்காரின் நிதி மந்திரி காட்டிய கணக் குப்படி, 1945-46ம் வருஷத்தில் துண்டாடப்படாத இந் தியாவில் ஒருமனிதனின் சராசரி வருஷ வருமானம் ரூ. 198 இதர நாடுகளில் ஒருவனின் சராசரி வருஷ வருமானம்ஆஸ்திரேலியா, ரூ. 1,199. கனடா ரூ. 2,868, பிரிட்ட னில் ரூ. 2355. அமெரிக்காவில் ரூ. 4,668, இதற்கெல் லாம் காரணம் இந்தியாவில் உள்ள நாம் உழைப்பில் செல விடும் காலம் மிகமிகக் குறைவு கையாளும் முறைகளோ மிக மிக ஒழுங்கற்றவை. இவை போக, நாட்டின் பெரும் பகுதியினர் கல்வியறிவற்றவர்கள். அதிக உழைப்பு ஆரோக்கியத்துக்குக் கேடு எனும் தவறான அபிப்பிராயம் நிலவுகிறது. அதிகப் படி யாக

அமெரிக்கன் இந்தியனைவிட இருபங்கு அதிகமான வயசுக்காலம் வரை வாழ முடிகிறது. மேலும், அவன் வாரத்தில் ஐந்து தினங்கள் தான் உழைக்கிறான். இன்றைய மனிதனை உய்விக்கக் கூடியது உழைப்பு தான்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடு_கல்தா.pdf/36&oldid=1396079" இலிருந்து மீள்விக்கப்பட்டது