வருகிறார்ள்கள் என்று உழையாமலே நலன்களை அனுப விக்க விரும்புகிறவர்கள் அதிகரிக்கிறார்கள் என்பதைத்தான் இப்படிக் குறிப்பிட்டார். இவ்விதம் பகட்டாக வாழத் தவிப்பவர்கள் பட்டணத் திலே குடிபுகுந்து விடுகிறார்கள். - கால ஓட்டத்திலே பட்டணங்கள் கும்பல் மிகுந்த - குறைவுகள் , நலக்கேடுகள் மிகுந்த-இடமாகவும், இதர நகர்ப்புறங்களும் கிராமங்களும் வாழ்வோர் அதிகமில்லாத தனால் கவனிப்பாரற்று, வசதிகள் குறைந்து பாழிடங்கள் போலவும் மாறிவருகின்றன. பணக்காரர்கள் உழைப்ப தில்லை. அவர்களைப் போல் வாழ விரும்புகிற மத்தியதரக் குடும்பத்தினரில் உழையாமலே வாழ விரும்புவோர் அதி கரித்து வருகிறார்கள். இவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உழைப்பவர்கள் இரவு பகலென்று பாரா மல் அதிகம் உழைத்துச்சாக வேண்டியிருக்கிறது. உழைத் தாலும் இவர்களது வாழ்க்கைத் தேவைக்குத் தக்க வரவு கிடைப்பதில்லை, முதலாளி வர்க்கத்தினரின், அவர்களைப் போல் போலி வாழ்வு வாழ்த்துணிகிற மத்தியதரவகுப்பினரின் போக்காக பொழுதைப் போக்குவதற் கென்று இன்று திகழ்கிற வீணத்தனங்களினால் நாட்டின் பண்பாடு சீர்கேட்டை அடைகிறது என்று முன்னரே குறித்திருக்கிறேன். சங்கீதம், நாட்டியம், சினிமா, பத்திரிகைகள் முதலியன் எல்லாமே தனிப்பட்ட சிலரது-அல்லது குறிப்பிட்ட கும்பல்களின் நன்மைக்கே பயன்படுத்தப் படுகின்றன. இசைக்குயில் களின் கானமும், நாட்டிய ரம்பைகளின் ஆட்டமும் பணம் திரட்டப் பயன்படுத்தப் படுகின்றனவே தவிர, எல்லோ
பக்கம்:கொடு கல்தா.pdf/41
Appearance