பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

பள்ளியறையாக மாறிவிடுகின்றன! இன்று எல்லா ஊர்க்கோயில்களிலும் சகஜமாக நடைபெறுவது இது.

கோயில்களில் உள்ள தாசிகள் தங்கள் உடல் விற்கும் தொழிலை வளர்க்கும் வியாபாரஸ்தலமாக நம்பியிருப்பது கோயிலைத்தான். பூஜை வேளைகளில் அங்கு வந்து நின்றுகொண்டு பக்தர்கள் மேல் கண் வலை வீசி இழுப்பது நடைமுறை பக்தர்களுக்கு 'உதவி புரிய' அர்ச்சகர்கள் முன் வருவதுண்டு! அவர்களுக்கு கமிஷன். 'கிராக்கி' இல்லாத இரவுகளில் அனுபவ பாத்தியதை! இப்படி கூட்டு ஒப்பந்தம் அவர்களுக்கிடையே!

கோயிலுக்கு வரும் அழகிகளை பின் தொடர்ந்து கிண்டல் செய்வதில் பல இளைஞர்களுக்கு தனி ஆனந்தம். அதற்காகவே எவ்வளவோ பேர் கோயிலுக்கு வருவதுண்டு. பெண்களைப் பார்த்து கண்ணடிப்பது சிரிப்பது தங்கள் நண்பர்களிடம் பேசுவதுபோல் அங்கவர்ணனை பண்ணுவது. பிரகாரங்களில் துரத்தி வேட்டையாடுவது-இப்படியெல்லாம் நடைபெறுகின்றன கோயிலில்.

இது தான் பக்தியா?

இன்று கோயில்கள் காமக்கேளிக்கை நிலையங்களாகத் திகழ்கின்றன; வியாபாரத்தில் வளர்ப்புப் பண்ணைகளாக வளர்ந்துவிட்டன என்பதற்கு மேலே குறிப்பிட்ட செயல்கள் சகஜமாக மலிந்து விட்டதே காட்டும். இவற்றை அறிய ஆராய்ச்சி ஒன்றும் தேவையில்லை. சும்மா பார்ப்பவர்கள் பார்வையிலே கூட இவை தாராளமாகப்படும், இத்தகைய செயல்கள் 'தண்ணிபட்ட பாடுதான்' ஆலயங்களில்