உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ஆ 9 அனுபவங்கள் பெற்ற பின்னர், 'தி மெடிக்கல் ஷாப் என்கிற பெரிய மருந்துக்கடையில் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தார். கிளார்க் வேலை தான். வேலை கடுமையாக இருக்கும். காலை 9 மணிமுதல் இரவு 9.30 அல்லது 10 மணி வரை வேலையிருக்கும். தனியாக ஒரு அறையில் தங்கி, முறையான ஒட்டல் அல்லாத தனிப்பட்டவர்கள் நடத்திய உணவு விடுதியில் சாப்பிட்டுக் கொண்டு சிரம வாழ்க்கை அனுபவித்து வந்தார் அவர். பெரிய அண்ணன் கலியாணசுந்தரத்துக்கு திருமணம் ஆகியிருந்தது. ஒரு பெண்குழந்தை பிறந்திருந்தது. மாமனார் முயன்று திருநெல்வேலி டவுனில் முனிசிபல் பஸ் ஸ்டாண்டில் பில் கலெக்டர் வேலை வாங்கிக் கொடுத்திருந்தார். அண்ணன் மாமனார் வீட்டிலேயே தங்கி, அந்த வேலையைக் கவனித்து வந்தார். நான் பூரீவைகுண்டத்தில் வேலை பார்த்தபோது, ஆரம்பத்தில் சில மாதங்கள் 'சைவாள் சாப்பாட்டுக் கடை ஒன்றில் உணவு, உண்டு வந்தேன். தனியாக அறை அமர்த்தி வசித்தேன். பிறகு, அம்மாவும் அண்ணன்களும் விரும்பியபடி, வசதியான வீடு வாடகைக்கு அமர்த்தி, அம்மா அங்கு வந்து தங்க ஏற்பாடாயிற்று. தம்பி முருகேசனும் உடன் இருந்தான். நான் வேலையை விட்டதும், எல்லோரும் திருநெல்வேலியிலேயே தங்குவது என முடிவாயிற்று. திருநெல்வேலி அரசடிப்பாலத் தெருவில், வாய்க்காலை ஒட்டிய, வசதிகள் நிறைந்த ஒரு வீட்டில் குடிபுகுந்தோம். - 1941ஆம் வருடம் ஜூன் மாதம் நடுவில் அது நிகழ்ந்தது. இப்படியாக எனது வாழ்க்கையின் புதிய அத்தியாயம் தொடங்கியது. நான் வேலையை விட்டபோது, இனி என்ன செய்வது என்று எதிர்காலத் திட்டம் எதுவும் கொண்டிருக்கவில்லை. எதிர்காலம் பற்றி நான் எண்ணவும் இல்லை. நிகழ்காலத்தில் அதிகம் அதிகமாக எழுத வேண்டும், நிறையப் படிக்க வேண்டும் என்ற நினைப்பே எனக்கு இருந்தது. சின்ன வயது முதலே சுவாரசியமான கதை சொல்லிப் பழகி வந்ததாலும், பின்னர் தொடர்ந்து நல்லநல்ல கதைகளைச் சொன்ன புத்தகங்களைப் படிப்பதில் ஆர்வம் கொண்டிருந்ததாலும், இவர்களைப் போல நானும் கதைகள் சொல்ல வேண்டும்,