வல்லிக்கண்ணன் & 25 அடுத்துள்ள சிந்துபூந்துறை கிராமம் சேர்ந்தோம். எதிராக மறு கரையில் இருப்பது வண்ணார்பேட்டை நீரில் இறங்கி ஆற்றைக் கடந்தோம். தண்ணிர் அதிகமாக இல்லை. இறங்கி நடப்பதற்கு வசதியாக இருந்தது. தண்ணிரை ஒட்டி நீண்ட படித்துறையும் கரையின் மீது பேராச்சி அம்மன் கோயிலும் உள்ளன. இவை எல்லாம் புதுமைப்பித்தன் கதைகளில் இடம் பெற்றிருக்கின்றன. ஆற்றைக் கடப்பதற்கு, சிறிது தூரத்தில், கலோசன முதலியார் பாலம் இருக்கிறது. கிழக்கிந்தியக் கும்பெனியார் காலத்தில், கும்பெனியில் துபாஷ் வேலை பார்த்த முதலியாரால் கட்டப்பட்ட பாலம் அது. ரொம்பவும் உறுதியானது. சுண்ணாம்பு பனைவெல்லம், முட்டைக்கரு, பதநீர் எல்லாம் சேர்த்து சாந்தாக அரைத்துப் பாலத்தைக் கட்டியிருந்தார்கள்; எந்த வெள்ளமும் அதை அசைக்கமுடியாது என்று மக்கள் பெருமையாகப் பேசுவார்கள். பாலம் வழியாக வருவது சுற்றுவழி என்பதால், நாங்கள் ஆற்றில் இறங்கி நடந்து வண்ணார்பேட்டை அடைந்தோம். மாலை 4 மணி அளவில் டி.கே.சி.வீடு போய்ச் சேர்ந்தோம். வீட்டின் முன் பகுதியில், டி.கே.சி.யின் உதவியாளராகப் பணிபுரிந்த எஸ்.வேங்கடசுப்பிரமணியம் என்ற இளைஞர் இருந்தார். பிற்காலத்தில், எஸ்.வி.எஸ். என்ற பெயரில் எழுத்தாளராகத் தெரியவந்தவர். கல்கி’ பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். அவரிடம் நாங்கள் எங்களை அறிமுகம் செய்து கொண்டு எங்கள் விருப்பத்தைத் தெரிவித்தோம். அடுத்த அறையில் சாய்வுநாற்காலியில் டி.கே.சி. ஒய்வாகச் சாய்ந்திருந்தார். அவரிடம் எங்களை அழைத்துச் சென்ற எஸ்.வி.எஸ், உங்களைப் பார்க்க வந்திருக்கிறார்கள் என்றார். டி.கே.சி. நிமிர்ந்து உட்கள்ந்து, முகம் முழுவதும் மலர்ச்சியுற, அன்புடன் எங்களை வரவேற்றார். அருகில் இருந்த ஆசனங்களில் அமரும்படி சொன்னார், நாங்கள் அவரிடமும் எங்களை அறிமுகம் செய்து கொண்டோம். நாங்கள் என்ன செய்கிறோம் என்று விசாரித்தார். எங்களை அவர் அலட்சியப்படுத்தவில்லை. தமிழின் சிறப்பு, பழம் தமிழ் இலக்கியங்கள், தமிழ்க் கவிதைகளின் உயர்வு, கம்பராமாயணம் முத்தொள்ளாயிரம் பற்றி எல்லாம் அவர் தமது இயல்புப்படி விவரித்தார். அச்சமயத்தில்தான் வெளிவந்திருந்த
பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/26
Appearance