器 2 路 ராஜவல்லிபுரம் - அழகான பெயரை உடைய அழகிய சிற்றுார். அமைதியும் வளமும் நிறைந்த ஊர் ஊரின் மேற்குப் பக்கம் விரிந்து கிடந்தது பெரியகுளம் கிழக்குப் பக்கத்தில் சிறிய நயினாங்குளம். அதன் கரையாக அமைந்திருந்தது ஆலமரங்கள் நின்ற சாலை. அது பாலா மடை சீவலப்பேரி முதலிய ஊர்களுக்கு இட்டுச் செல்லும். ராஜவல்லிபுரத்தில் கார்காத்த வேளாளர் வீடுகள் அதிகம். பெரிய பெரிய வீடுகள். வசதியான வாழ்க்கை வாழ்ந்தவர்கள். ஒரு காலத்தில் நூற்று எண்பது குடும்பத்தினர் வசித்த ஊர். பிறகு எண்ணிக்கை குறைந்து குறைந்து பத்துப் பன்னிரண்டு காரைக்கட்டுப் பிள்ளைமார் வீடுகளே கொண்ட இடமாகிவிட்டது. தேவர்கள் (மறவர்) அதிகமாயினர். இதர சாதியினரும் கலந்து வசிப்பர். ஆதிதிராவிடர் வசிக்கும் சேரி ஊரை விட்டுத் தள்ளி கிழக்கே உள்ளது. தெற்கே ஒரு மைலுக்கு அப்பால் தாமிரவர்ணி ஆறு ஓடுகிறது. அதன் கரை மீது பனைமரங்களும் உடைமரங்களும் நிறைந்த காடு அதனிடையே தான் செப்பறை நடராஜர் கோயில் இருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் பெயர் பெற்ற திருத்தலங்களில் அதுவும் ஒன்று. ரொம்ப காலத்துக்கு முன்பு செப்பறை நடராஜர் கோயில் ஆற்றுக்குள் மணல் பகுதியில் தான் இருந்தது. ஆற்றில் வந்த பெரும் வெள்ளம் கோயிலை இடித்துத் தகர்த்து விட்டது. அதனால் கோயில் மேட்டில், கரையைவிட்டு சிறிது தூரத்துக்கு அப்பால், கட்டப்பட்டது. சிதம்பரம் கோயில் பாணியில் கட்டப்பட்டுள்ளது. தாமிரசபை, நடராஜர் திருஉருவம் இருக்கிற கருவறைக்கு மேலே கூரை தாமிரத்தால் வேயப்பெற்றது. சிதம்பரத்தில் உள்ளது போலவே சிறுசிறு செப்புத் தகடுகளால் அமைக்கப்பட்டது. அதனால் அது செப்பறை எனப் பெயர்பெற்றது. காட்டுக்கோயில், அருகில் யாரும் வசிக்கவில்லை. மனிதர்கள் வசிக்கும் ஊர் ஒருமைல் தள்ளியுள்ள ராஜவல்லிபுரம் தான். காலை யிலும் மாலையிலும், நடராஜருக்கு பூஜை செய்வதற்காக பட்டரும் மடப்பள்ளி ஜயரும் மணி அடிக்கவும் இதரவேலைகள் செய்வதற்குமாக நிலைபெற்ற நினைவுகள் : 17
பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/17
Appearance