உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடுத்து உபசரித்தார்கள். பல நாள்கள் அந்தக் கருடன் கிருஷ்ணன் கோயிலிலேயே உட்கார்ந்திருந்தது. தெம்பு ஏற்பட்டதும் கோயில் வட்டாரத்தில் பறந்து திரிந்துவிட்டு, மீண்டும் கொடிமரத்தின் அருகில் வந்து உட்கார்ந்துகொள்ளும் திடீரென்று ஒருநாள் அது பறந்து வெளியேறி வான்வெளியில் சஞ்சரித்தது. அப்புறம் அந்தக் கோயிலுக்கு அது வரவேயில்லை. ஒருசமயம் அப்பா கழுகுமலை ஊருக்குப் போன போது அண்ணனும் நானும் உடன்சென்றோம். அங்கே செயல்பட்ட பஞ்சு அறுவை ஆலையை - ஜின்னிங் ஃபேக்டரியை - பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. இயந்திரங்கள் தடதட ஒசையுடன் இயங்கிக் கொண்டிருந்தன; பஞ்சை பதப்படுத்தி வெளியே தள்ளியவாறு இருந்தன. அவை வெகுநேரம் பார்ப்பதற்கேற்ற வேடிக்கைக் காட்சியாகத் தோன்றியது. இன்னொரு சமயம் அப்பா அம்மா, அண்ணன் தம்பியோடு கழுகு மலை கோயில் திருவிழா பார்க்கப் போயிருந்தோம் வில் வண்டியில். ஒரு இடத்தில் அப்பா வண்டியிலிருந்து இறங்கி மெதுவாக நடந்து வந்தார். அவ்வழியே கொட்டும் முழக்குமாகக் காவடி எடுத்து பக்தர் களும் அவர்களை சேர்ந்த கூட்டமும் வந்து கொண்டிருந்தது. கொட்டுச்சத்தமும் காவடி ஆட்டமும் என் கவனத்தை ஈர்த்தன. வேடிக்கை பார்ப்பதற்காக நான் நகர்ந்து வண்டியின் பின்புறம் சென்றேன். ஆர்வத்தில் எட்டிப் பார்த்த போது நிலை தவறி வண்டியிலி ருந்து விழுந்தேன். வண்டியின் பின் பக்கம், ஆள் ஏறுவதற்கு வசதியாக அமைக்கப்பட்டிருந்த வட்டவடிவ இரும்பு மிதிபடியில் என்முகம் தாக்குண்டது. மேல்உதட்டில் வெட்டுக் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்ட லாயிற்று. பலத்த அழுகையோடு நான் ரோடில் விழுந்தேன். "ஐயோ, பிள்ளை...' என்று வண்டிக்குள்ளிருந்த அம்மா கத்தவும், வண்டிக்காரன் வண்டியை நிறுத்தினான். பின்னால் சற்று தள்ளி நடந்து வந்த அப்பா, தொலை. சாகு...? என்று கோபத்தோடு கூச்சலிட்டபடி நெருங்கினார். அதற்குள் யாரோ என்னை தூக்கி எடுத்தார்கள். ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. பலத்த காயம் தான். மருத்துவமனைக்கு எடுத்துப் போய் எனக்கு உரிய சிகிச்சை செய்யப் பட்டது. மேல் உதட்டில் சிறு தையல் போட வேண்டியதாயிற்று அந்தக் காயம் ஆறுவதற்கு அநேக நாள்கள் பிடித்தன. காயத்தின் தழும்பு நிலைபெற்ற நினைவுகள் $ 37