உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பாளன் பேசுகின்றேன்... சிறந்த அறிஞரும் எழுத்தாளருமான திரு. வல்லிக் கண்ணன் அவர்களுடன் ஒரு நூலாசிரியனாக நான் அறி முகம் பெற்றது.1985ல், நண்பர், புதுவைத் தமிழ்ப் பேராசி ரியர் திரு. பசுபதி அவர்கள் மூலம் அன்னாரின் நட்பு எனக்குக் கிடைத்தது. அத்தருணத்தில் எழுத்துக்கு மட்டு மல்ல, வாழ்க்கைக்கும் ஒரு தெளிந்த பார்வையை அவர் வழங்கிய அன்பிற்காக இன்றைக்கும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன். தற்போது நண்பர் திரு குறிஞ்சிவேலன் மூலம் திரு வல்லிக்கண்ணன் அவர்களின் கதைகளை நூலாக வெளியிடும் வாய்ப்பு எங்கட்குக் கிடைத்துள்ளது. இவ்வாய்ப்பினை எமது பதிப்பகத்தின் நற்பேறாகப் போற்றி மனம் பூரிக்கின் றோம். திரு. வல்லிக்கண்ணன் அவர்கள் எழுத்துலகில் ஐம்பதாண்டுகள் ஆட்சி கண்டவர்; பல்வேறு ரகங்களில் - கதை, கவிதை, கட்டுரைகளைப் படைத்தவர் மட்டுமல்ல, இந்த இலக்கியப் பரப்புகளைத் திறம்பட ஆய்ந்தவரும் கூட, அம்முறையில் சாகித்ய அகாதமிப் பரிசு பெற்றவர். மகாகவி பாரதி போன்றோரை நம் தமிழ்ச் சமுதாயம், மிகக் காலம் கடந்தே அடையாளம் கண்டு மதிக்கக் கற்றுள் ளது. அப்போக்கிலேயே ஊறிப் போகாமல், மணிக் கொடி,