உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தீபம் யுகம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 தீபம் யுகம் தீபம் மாத இதழ் அந்தரங்க சக்தியோடு இலக்கிய சேவை செய்ய ஆசைப்படுகிறது. தீபம் மாத இதழ் ஒரு சுதந்திர எழுத்தாளனின் தன்மான முயற்சி யாக இருக்கிறது. தீபம் மாத இதழில் தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர்கள் யாவரும் சுதந்திரமாகவும் கருத்தோட்டத்திற்குத் தடையின்றியும் எழுதுகின்றனர்.” தமிழ் மொழியின் வளத்துக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் தங்க ளால் இயன்றதை செய்ய வேண்டும் எனும் ஆர்வம் உள்ள எழுத்தா ளர்களின் படைப்புகள், கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்ற வடிவங்களில் 'தீபம்' இதழ்களில் இடம் பெற்றன. சிந்தனை ஒளி கனலும் எழுத்துக்களும், புதுமையான பகுதிகளும் 'தீபம் இதழுக்கு தரமும் கனமும் சேர்த்தன. தரமான வாசகர்கள் ஆழ்ந்த இலக்கிய முயற்சிகளை விரும்பி வரவேற்பவர்கள் குறைவாக உள்ள தமிழ்ச்சூ ழலில், 'தீபம் போன்ற பத்திரிகை நடத்துவது எதிர் நீச்சல் போடும் சாதனையாகவே அமையும். இச்சூழ்நிலை ஏற்படுத்திய எண்ணங்களை நா.பா. நன்கு பதிவு செய்திருக்கிறார். "தமிழ் வாசகர்களில் இலக்கியத்தரமான அபிப்பிராயமுள்ள வர்களின் பலமான அணி ஒன்று உருவாகவும், இலக்கியத்தரமான எழுத்தாளர்களைப் பற்றிய அறிமுகமும் பேச்சுக்களும் பரவவும் தீபம் முழுமூச்சுடன் பாடுபட்டிருக்கிறது. இனியும் பாடுபடும். படிப்பதற்கு நிறையப் பயனுள்ள நல்ல அம்சங்களைத் தருகி றோம் என்று பெருமைப்படுவதைத் தான் தன் இலக்கிய சேவையின் இலக்கியமாகக் கருதுகிறது தீபம். பல பத்திரிகைகள் வாசகர்களைப் பயன் பெறச் செய்வதைவி டக் கவர்வதையே நோக்கமாகக் கொண்டு திடீர் திடீரென்று கீழ்த்தர மாக இறங்கி முழுவதும் சினிமா மயமாக மாறும் இந்த நாளிலும் தீபம் தன் இலட்சியங்களில் திட நம்பிக்கை குன்றி விடவில்லை. இந்தப் பத்திரிகையை இப்படி நடத்துவதற்காக நான் படும் சிரமங்களெல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/21&oldid=923213" இலிருந்து மீள்விக்கப்பட்டது