வல்லிக்கண்ணன் 岛伞 அன்ை உள்ளம் கனத்தது. கண்களில் நீர் பொங்கி வழித்தது. பத்மாவின் அப்பாவும் அம்மாவும் இதற்குள் அங்கு வந்து விட்டார்கள். என்னம்மா இது? மாமா போனால் என்ன? அடிக்கடி உன்னை பார்க்க வருவாங்க என்று அப்பா சொன்னார். பத்மா, இங்கே வா. ஏன் இப்படி அழுறே?" என்று அம்மா பரிவுடன் அழைத்தாள். பத்மா அவர்கள் பக்கம் திரும்பவே இல்லை. ‘என்னை விட்டுட்டுப் போகப்படாது. நானும் உங்க. கூடவே வருவேன் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவரைப் பிடித்திருந்த கைகளை அகற் வே யில்லை. நீங்க போயிட்டா, எனக்கு மறுபடியும் க்கு வந்துவிடும். வந்தால், நான் பிழைக்கவே மாட்டேன்’ ன்று விம்மினாள். சொக்கலிங்கத்தின் உள்ளத்தை அவள் பேச்சும் அன்புப் பிடிவாதமும் ஆழப் பற்றி உலுக்கின. அச்சிறுமியின் தாயும் தந்தையும் மெளனமாகக் கண்ணிர் வடித்தவாறு நின்றார் கள். இந்த அன்பு இதயங்களை நோகடித்து, ஒரு அன்பு மல ரைக் கசக்கி எறிந்துவிட்டு, நாம் பிரிந்து சென்று என்னதான் சாதிக்கப் போகிறோம்? இப்படித் தவிக்கும் தூய இதயத்தைச் சாம்பிக் குவியவைப்பதைவிட, நன்கு மலர்ந்து ஒளி வீசும்படி அதற்கு உதவி புரிவதே நல்ல காரியமாக அமையும். இப்படி அவர் உள்ளம் தீர்மானித்தது. - . ‘அழாதே பத்மா, - நான் போகலே. உன்னை விட்டுப் போட்டு நான் எங்கும் போகப் போவதில்லை!" என்று உறுதி. யாக அறிவித்தார் அவர். சரியான வேங்கைப் புலிதான்
பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/44
Appearance