7 கவிஞரின் நூல்களைப் புரிந்து கொள்ள அகராதி யைப் புரட்ட வேண்டிய அவசியம் கிடையாது. உள்ளத் தைத் தொடும் உணர்ச்சி ஓவியங்கள் அவரது கவிதை கள். தமிழர் உள்ளத்தில் கொஞ்சி விளையாடும் இன்பத் தமிழ் அவருடையது. பழகு தமிழ்’ அவர் கையாள்வது. யாரும் ரசிக்க முடியும், ரசிக்கிறார்கள். வான் போன்று விரிந்த அவரது கவிதைப் பூங்கா வில் மின்வெட்டுகின்றன எவ்வளவோ சிறப்புகள். கருத்திலும், நடையிலும், வர்ணனையிலும் புதுமை ஒளி, எத்தனையோ நயங்கள். அவற்றில் ஒன்றான உவமை நயத்தைச் சுட்டிக் காட்டும் முயற்சியே என்னுடையது. நயங்களை இதோ, அதோ’ என்றுதான் காட்ட முடியும், வானத்து வெள்ளிகளைச் சிறு சாளரம் மூலம் சுட்டுவது போல, அழகை ரசிக்க வேண்டியது அழகுப் பக்தர்களின் பொறுப்பு. தான் கண்ட அழகுகளை மற்றவருக்குச் சுட்டுக் காட்டுவது அழகுப் பித்தனின் பண்பு, கவிஞர் பாரதிதாசன் கவிதைகளில் நான் கண்ட உவமை நயத்தைச் சுட்டும் முயற்சியே இது. அவற் றைப் பற்றிய பிரசங்கம் அல்ல. அவற்றின் தொகுப்புத் தான. உவமை நயம் கவிஞரின் கவிதா நயத்தை, தமிழின் செல்வத்தை அனுபவித்து ஆனந்தம் அடைய வேண் டும் என்ற ஆவலை அன்பர்கள் மனதில் எழுப்ப வேண் டும் என்பது என் ஆசை. ஒவ்வொரு தமிழனும் பாரதிதாசன் கவிதைகளைப் படிக்கவேண்டும், கவிஞரின் பெருமையை உணர வேண்டும் என்பது என் ஆவல், கவிஞர் பாரதிதாசன் தமிழின்செல்வம், தமிழ் நாட்டின் பேறு. தமிழரின் துனைவர். வல்லிக்கண்ணன்
பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/8
Appearance