48
விஜயலக்ஷ்மி பண்டிட்
விட்டது. பரிபூரண சுதந்திரமே நமது லட்சியம் என்பது தீவிரவாதிகளின் விடாப்பிடியான சுலோகமாக அமைந்தது. சர்வகட்சி மகாநாடு கூட்டவேண்டும்; பிரிட்டிஷார் மனமுவந்து அளிக்கத் தயாராக இருக்கும் புதிய அரசியல் திட்டத்தைக் கைநீட்டி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது மிதவாதிகளின் கருத்து.
ஜவாஹர்லால் தந்தையின் மிதவாதத்தை எதிர்த்தார்.தந்தைக்கும் மகனுக்குமிடையே முன்பு எப்போதும் ஏற்பட்டிராத வகையில் பலத்த அபிப்பிராய பேதம் தடித்து நின்றது. அதனால் ’ஆனந்த பவன’த்தில் சோகம் மனத்துத்தொங்கியது.ஜவாஹரின் தாயும் விஜயலக்ஷ்மியும் கிருஷ்ணாவும் வாய்விட்டுச் சொல்ல முடியாத அளவு வேதனயைச் சுமந்து வருந்தினர். அவர்கள் யாருக்காகப் பரிந்து பேசமுடியும்? தங்கள் பக்திக்கும் பாசத்துக்குமுரிய இருவரில் யாரிடம் அறிவுரை கூறிப்புயலைத் தவிர்க்க முடியும்?
அத்தகைய ருக்கடியான கட்டத்தில் கல்கத்தா காங்கிரஸ் கூடியது. அதற்குத் தலைவர் மோதிலால் நேரு, அலகாபாத்திலிருந்து பெரிய கோஷ்டி கிளம்பிச் சென்றது தலைவருடன். ராணி நேரு, விஜயலக்ஷ்மி, கிருஷ்ணா முதலியவர்கள் ரயில்வண்டித் தொடரில் விசேஷமாக இணைக்கப்பட்ட ஸ்பெஷல் போகிகளில் பிரயாணம் செய்து, கல்கத்தா நகரைச் சேர்ந்தார்கள். அந்தக் காங்கிரஸ் பிரமாத தடபுடல்களோடு நடைபெற்றது. தலைவருக்கு ராஜமரியாதைகள் காட்டினார்கள். சுபாஷ் போஸின் தலைமையில் இளைஞர் குதிரைப்படை ஒன்று அணிவகுத்து நின்றது ; தலைவர் போகு மிடங்களுக்