பூத, பிரேத, பைசாசங்கள்
விஞ்ஞான யுகமான இந்த நூற்ருண்டிலேகூட பேய் பிசாசுகள் பற்றிய பயம் மனிதரிடமிருந்து விலகி விட வில்லை. பேய் வசிக்கும் வீடுகளைப் பற்றியும், பிசாசுகளின் சக்தி பற்றியும் இன்றுகூட மனிதர்கள் பேசிப் பொழுது போக்குகிருர்கள். பேய் பிசாசுகளைப் பற்றிய செய்திகளையும், பொய்களையும் ஆர்வத்தோடு கேட்கிருர்கள்.
தான் புரிந்துகொள்ள முடியாதவற்றைப் பற்றி இஷ்டம்போல் கதை அளப்பதில் மனித மனம் எப்பொழுதும் ஈடுபாடு உடையதுதான். வெறும் பேச்சில் பொழுது போக்கு அம்சமாக இருந்த பேய் பிசாசு விவகாரம், சுவையான கதைக் கலையாக வளர்ந்து, கற்பனை உள்ளமும் எழுத்தாற்றலும் பெற்ற வர்கள் கையில் நல்ல இலக்கிய சிருஷ்டியாகப் பரிண மித்து, ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக விளங்குவது புதிய செய்தி அல்ல.
ஆங்கிலத்தில் பேய்-பிசாசு இலக்கியம் வளமாகத் திகழ்ந்து வருகிறது. பயங்கரக் கதைகள் மிகுந்த திறமைசாலிகளால் உயர்வான முறையில் எழுதப் பட்டுள்ளன. குறிப்பிடத் தகுந்த பேய்-பிசாசு நாவல் களுக்கும் குறைவில்லை.
இத்தகைய கதைகளின் தொகுதிகள் ஆங்கிலத்தில் நிறையவே இருக்கின்றன. அவ்வப்போது புதிது புதி தாக வந்து கொண்டுமிருக்கின்றன.
பெர்லின் நகரிலிருந்து, உயர்ந்த நூல்களே அழகான முறையில் பதிப்பித்து வழங்கும் லெவன்