உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44 வல்லிக்கண்ணன் கதைகள்

'சித்ரா! எனது அன்புப் பரிசு மேஜை மீது இருக்கிறது!: என்று வேண்டுமென்றே உரக்கக் கத்தினான் அவன. மெதுவாக தன் வழியே நடக்கத் தொடங்கிய அவன் காதில் இந்த உரையாடல் தெளிவாக விழுந்தது.

'யாரது?' அந்த வாலிபன் கேட்டான்.

"எவனோ பைத்தியம்! கவிதையெழுதுவதாகச் சொல்லி ஏதாவது உளறிக் கொண்டே இருப்பான்’ என்று அறிவித்தாள் சிதரா.

நம்பிராஜன் பெருமூச் செறிந்தான். 'கவிதையும் கற்பனையும் காதலை உண்டாக்கலாம். ஆனால் அது கொழுத்து வளாநது இனிய பலனைத் தருவதற்கு பணமும் வேறு பல வசதிகளும் அவசியம் தேவை' யென்ற எண்ணம் அவனுள் அலையிட்டது.

(குண்டுசி - தீபாவளி மலர்)


நினைத்ததை முடிக்காதவர்


கொம்பங்குளம் சிங்காரவேலு எங்கோ போய்விட்டான்!

அந்த ஊரில் பரபரப்பான பேச்சாயிற்று அது. 'சிங்காரவேலு போயிட்டானாமே? எங்கே போயிருப்பான்? ஏன் ஊரை விட்டு, சொல்லாமல் கொள்ளாமல் போனான்? இப்படி பல கேள்விகள் பலராலும் ஒலிபரப்பப்பட்டன.

சிங்காரவேலு கொம்பங்குளம் ஊரின் கவனிப்புக்குரிய முக்கியப் புள்ளியாகத்தான் இருந்தான். ஊரார் எல்லோரும் இன்புற்றிருக்க எண்ணிச் செயல்புரிந்த பராபரமாகத்தான் வாழ்ந்தான். ஏன் அவன் இரவோடு இருளோடு ஒடிப்போக வேண்டும்?

அதுதான் யாருக்கும் புரியவில்லை.

'பிள்ளையாண்டான் பிழைக்கத் தெரியாத பயலாக இருக்கானே! ஒழுங்கா ஏதாவது வேலை பார்த்து, பணம் சம்பாதித்து உருப்படியாக வாழாமல், நாடகம், நடிப்புன்னு சொல்லி, தானும் கெட்டுப்போறதோடு ஊர்ப்பிள்ளைகளையும் கெடுத்துக் கிட்டிருக்கானே! என்று சில பெருசுகள் குறைகூறிப் புலம்புவது வழக்கம்தான்.