岑 44 ஆ பாரதிதாசன் உவமை நயம் அப்படி உருளும் நீர்க்குண்டுகள், இலை, நீர் முன்றையும் எடுத்துக்காட்ட ஒரு உவமை இருக் கிறது. - 'கண்ணாடித் தரையின் மீது கண்கவர் பச்சைத் தட்டில் எண்ணாத ஒளி முத்துக்கள் இறைத்தது போல் ' பொருத்தமாகவும் அழகாகவும் இருக்கிற தல்லவா? முல்லையைப் பற்றிக் கவிஞர் பாடியிருக்கும் அழகான கவிதைதான் உங்களுக்குத் தெரியுமே. உயிர்ப்பு நிறைந்த பாடல். உவமை நிறைந்ததும் கூட. ஒரு முறை படித்தால் மீண்டும் படிக்கும்படி ஆசையைத் துாண்டுவது. வானத்து மீன்களைப் போல் கண்சிமிட்டும் முல்லை மலர்கள் அச்சில் அடித்த வெள்ளிப்பணம் போல் விளங்குகின்றன எனக் கூறுவது வியப்பதற்குரிய உவமை இல்லையா? அந்தக் கவிதையையே சுவைக் கலாமே 'பச்சைப் பசுந் தலைக் காட்டினிலே ஒரு பக்கத்தில் பூத்திட்ட முல்லையைப் பார்! அச் சடையாளம் தல் வான் குளத்தில் மின்னும் ஆயிரம் மீனெனத் தோன்று மடி! அச்சில் அடித்திட்ட வெள்ளிப்பணம் கையில் அள்ளி இறைத்தது போல் இருக்கும்!” மலர்களையும் நீர்ப்பெருக்கையும் பிறவற்றை யும் கண்டு களித்த கவி பறவை இனத்தின் சிறப்பைக் காணாதிருக்க முடியுமா? அவற்றிலே
பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/45
Appearance