30
விஜயலக்டிமி பண்டிட்
1920-ம் வருஷம் அரசியல் போராட்டங்களும் கிலாபத் கிளர்ச்சியும் வலுப்பெற்று வளர்ந்தன. இந்திய மக்களின் உரிமை உணர்ச்சியும், தீவிரச் செயல்களும் வெள்ளையர் உள்ளத்தில் பீதியை நிறைத்தன.
ஜவஹர்லால் நேரு இந்திய அரசியல் வானத்தில் முளைத்த புதிய தாரகையென ஒளியுடன் திகழ்ந்தார். அவரது ஆர்வமும் திறமையும் சேவையும் எங்கும் பிரகாசித்தன.
நேரு குடும்பத்தின் கெளரவம் உயர்ந்தது. மோதிலால் நேருவின் தியாகமும் வீரமும் நாட்டு மக்களின் இதயத்திலே அவருக்குத் தனியானதொரு இடத்தைத் தேடிக் கொடுத்தன.
இத்தகைய சூழ்நிலையில் தான் விஜயலஷ்மியின் திருமணம் நிகழ்வதற்கு ஏற்பாடாயிற்று.
'ஆனந்த பவன'த்துக்கு வந்து போய்க்கொண்டிருந்த விருந்தாளிகளுக்கு ஒன்றும் குறைவு கிடையாது. ஆனால், மோதிலால் நேரு பிரபல வக்கீலாக வாழ்ந்த போது வந்த அதிதிகளின் தன்மை ஒரு ரகம். அவர் காங்கிரசில் சேர்ந்து நாட்டுப் பணிபுரியத் தொடங்கிய பிறகு வந்து சென்றவர்கள் வேறு ரகத்தினர்.
1921-ம் வருஷத்தில் ஒரு நாள். நேருவின் காரில் வந்து இறங்கிய அதிதி ஒருவர், தோட்டத்தில் நின்ற கிருஷ்ணாவின் கவனத்தைக் கவர்ந்தார். அழகும் உயரமும் பெற்ற இளைஞர் அவர், எல்லோரையும் போல அவரும் யாரோ ஒரு விருந்தாளி என்று தான் கிருஷ்ணா