உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器感 ராகுல் சாங்கிருத்யாயன்

லும் மதப்பற்று இல்லாதவராக, தாத்திகராகவும் கூட, மாறினர். போதிகயா ஆலயத்தை சநாதன இந்துக்களிடமிருந்து புத்த சமயத்தினருக்கு மாற்றித் தரவேண்டும் என்று ராகுல் கயா காங்கிரசில் தேசத் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்தார். 1923 மார்ச், ஏப்ரல் மாதங்களில் ராகுல் நேப்பாளத்தில் ஒன்றரை மாதங்களைக் கழித்தார். அந்நாட்களில் இந்து யாத்திரீகர்கள் சிவராத்திரி அன்று பசுபதி நாதரை தரிசிப்பதற்காக மட்டுமே நேப்பாளத்திற்குள் அனுமதிக்கப்பட்டார்கள். அங்கே புத்தமதப் பண்டிதர்கள், சந்தியாசிகள், மங்கோலியர் மற்றும் சீனிய லாமாக் களுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது.

நேப்பாளத்திலிருந்து திரும்பியதும் ராகுல் மீண்டும் கைதா ஞர். பங்கிப்பூர் சிறையில் தனிக் கொட்டடிக்கு அவர் அனுப்பப் பட்டார். பின்னர் ஹஸ்ாரிபாக் சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கே அவர் இரண்டு வருடங்கள் தங்க நேர்ந்தது. பாலி மொழி நூலான மஜ் ஹிம் நிகாயாவின் சிங்கள எழுத்துப் பிரதி ஒன்று அவ ரிடம் இருந்தது. தினந்தோறும் அதை அவர் படித்தார். போலி சார் கையில் சிக்கிய அந்தப் புத்தகத்தை மீட்பதற்கு அவர் இரண்டு நாட்கள் உண்ணுவிரதம் இருக்கவேண்டியதாயிற்று. காகிதம், பென்சில் அல்லது பேளு எதையும் வைத்துக்கொள்ள கைதிகள் அனுமதிக்கப்பட்டதில்லை. ஆயினும் எப்படியோ ஒரு கற்பலகையை அவர் அடைந்தார். கணிதம், அல்ஜிப்ரா, ஜியாமட்ரி, ஒளி இயல், வான நூல் ஆகியவற்றில் அவர் பெற். திருந்த அறிவை திருத்திக்கொள்ள அது உதவியது. அதே சிறை யில் வசித்த, கேரளாவைச் சேர்ந்த சங்கராச்சாரியார் ஒருவர் இதில் அவருக்குத் துணேபுரிந்தார். கருணையுள்ள ஆங்கிலோ இந்தியச் சிறை அதிகாரி குழந்தைகளுக்கான இங்கிலீஷ் புத்தகங் கள் சிலவற்றை அனுப்பினர். ராகுல் அவற்றையும் படித்தார். நட்சத்திரங்கள் சம்பந்தமான பெரிய படங்களே அவர் வரைய லாஞர். பெரும்பாலும் மர்மமும் வீரசாகசங்களும் நிறைந்த நான்கு ஆங்கில நாவல்களே இந்தியில் மொழிபெயர்த்தார். பிரஞ்சு, அவஸ்தான் மொழிகளே இக்காலகட்டத்தில் அவர் கற்ருர். -

1926-ல் மீரத் நகரில் ராகுல் ஹரி ராம்தாஸ் என்பவரைச் சந்தித்தார். பின்னர் இவர் பிரமச்சாரி விஸ்வநாத் ஆளுர்; இப் போது பிக்கு ஆனந்த கெளசல்யாயன் ஆகியிருக்கிருர் ராகுலும் இவரும் மிக நெருங்கிய உயிர் நண்பர்கள் ஆயினர். ராகுல் காஷ்மீரில் பயணம் செய்தார். கார்கில் வழியாக லடாக் போளுர். ஸ்தாகசங்க-ராஸ்-பா என்ற லாமாவை ஹெமிஸ் என்ற இடத்தில் சந்தித்தார். கால்பியில் ராகுல் சிறிது மெஸ்மரி