பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை .3i

காந்தி பள்ளிக்கூடத்தை மையமாகக் கொண்டு, நூல் நூற்கும் ராட்டினங்களை அவர் வழங்கினர். போஜ்புரியில் அவர் மக்கள் மத்தியில் சொற்பொழிவுகள் நிகழ்த்தினர். அந்நிய ஆட்சியை எதிர்க்கும் பேச்சுகள் அவை. 1922 ஜனவரி 31-ம் நாள் அவர் கைது செய்யப்பட்டார். சிறைக்குள் பதுக்கிக் கொண்டுவரப் பெற்ற, டிராட்ஸ்கியின் போல்ஷ்விசமும் உலகப் புரட்சியும் என்ற நூலின் பிரதி ஒன்று அவர்களுக்குக் கிடைத்தது. ர்ாகுல் சம்ஸ் கிருதத்தில் அரசியல் பஜனைப் பாடல் ஒன்றை இயற்றி, சிறையி லிருந்த சகாக்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் அதை உரக்கப் பாடினர்:

ஷ்ருனு ஷ்ருனு ரே பந்த், அஹ மிகா நஹ்யேகாகி

(கேள் ஓ பயணியே, நான் தனியாக இல்லை!)

ராகுல் குற்றத்தை ஒப்புக்கொள்ளவும், அவருக்கு ஆறு மாதம் சாதாரண சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. நன்றி’ என்ருர் ராகுல். அவர் கரங்களில் இரும்பு விலங்கு மாட்டப்பட்டது. என் இரண்டு கைகளிலும் தாத்தா வெள்ளிக் காப்புகள் அணி வித்தார். அவையும் ஏறக்குறைய இவ்விலங்குகள்போல்தான் இருந்தன. இதில் ஒரே ஒரு வித்தியாசம், இவை இறுக்கமாகப் பிணைக்கப்பட்டிருப்பதால், நான் நன்குக வேலை செய்ய இயல வில்லை’ என்று அவர் எழுதியுள்ளார். பக்ஸார் சிறையில் அவர் ஆறு மாதங்கள் வசித்தார். அப்போது அவர் ஃபைல்கள் கறுப்பு ஆகிய பொருள்கள் பற்றி, பிரஜ் பாஷாவில் இசைப் பாடல்கள் இயற்றினர். பாரதேந்து அரிச்சந்திரா எழுதிய அந்தேர் நகரி என்ற நாடகத்தை அவர்கள் நடித்தார்கள். சிறை யில் ராகுல், குரானே சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்க்க ஆரம்பித் தார். உடன் இருந்தவர்களுக்கு உபநிஷதமும் வேதாந்தமும் கற்றுக்கொடுத்தார். சிறைக்குள் நடந்த செயல்கள் பற்றிய செய்திகள் மறைமுகமாக வெளியே எடுத்துச் செல்லப்பட்டன. அவை மஸ்ருல் ஹக்கின் 'தாய் நாடு’ பத்திரிகையில் வெளியிடப் பட்டன.

1922 அக்டோபர் 29-ல் ராகுல் ஜில்லா காங்கிரஸ் செயலாள ராகத் தேர்வு செய்யப்பட்டார். கயாவில் நடைபெற்ற காங்கிரஸ் மகா சபைக் கூட்டத்தில் ராஜாஜி துணை மகாத்மா என அழைக்கப் பட்டார். மாறுதல் எதுவும் வேண்டாதவர்களின் உறுதியான குழுவுக்கு அவர் தலைவராக இருந்தார். அவர்களுக்கு எதிரான கோஷ்டியில் மோதிலால் நேரு, வித்தில்பாய் பட்டேல், தேசபந்து சி. ஆர். தாஸ் போன்ற சுயராஜ்யக் கட்சித் தலைவர்கள் இருந் தார்கள். ராகுல் மெது மெதுவாக கம்யூனிசத்தின் புரட்சிக் கொள்கையின் பக்கம் போய்க்கொண்டிருந்தார். அவர் முற்றி