8 வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் முதன் முதலாக அச்சில் வந்தது பிரசண்ட பத்திரிகையில்தான். 'பிரசண்ட விகடன்’ (மாதம் இருமுறை) ஆரம்ப எழுத்தாளர்களுக்கு நல்ல பயிற்சித் தளமாக அமைந் திருந்தது, அந்நாட்களில். அதன் ஆசிரியராகப் பணி யாற்றிய நாரணதுரைக்கண்ணன், இன்னார் இனியர் என்று பாராது", எழுதும் ஆர்வம் கொண்டு கதை எழுதத் தொடங்கிய இளைஞர்கள் பலருக்கும், ஊக்கம் அளித்து வந்தார். பிற்காலத்தில் பெயர் பெற்ற 'பெரிய எழுத்தாளர்கள் பலரது ஆரம்பகாலக் கதைகள் பிரசண்ட விகடன் இதழ்களில் இடம் பெற்றுள்ளன, - 1930களிலும், 40களின் ஆரம்ப வருடங்களிலும், தேசீய உணர்ச்சியோடு விடுதலை முழக்கம் செய்யும் வேகமான எழுத்துக்களை வெளியிடும் பத்திரிகைகள் பல தோன்றி, நடந்து, மறைந்து கொண்டிருந்தன. லோக சக்தி, பாரத சக்தி என்ற பத்திரிகைகள் அப்படிப்பட்டவை. விகடன்’ அவற்றில் நான் கதைகளும், உணர்ச்சிகரமான கட்டுரைகளும் பாடல்களும் நிறையவே எழுதினேன். பலரது கவனத்தையும் அவை ஈர்த்தன. அந்த சந்தர்ப்பத்தில் தான் எனக்கு ஒரு புனை பெயர் தேவை என உணர்ந்தேன். அதுவரை ரா.சு. கிருஷ்ணஸ்வாமி என்றும், ரா.சு.கி. என்றும் தான் எழுதிக் கொண்டிருந்தேன். - 、 பாரதியார் தன் நண்பர் குவளையூர் கிருஷ்ணமாச்சாரி என்ற பெயரை குவளைக் கண்ணன்
பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/10
Appearance