24
பெரிய கேடிக்கைதான். எனக்கு நீர் என்ன ஐயா செய்திக்?. காதுக்கு ஏதோ இனிமையாகப் பாடினிர். உணவம், மனுஷன் கஷ்டப்பட்டுக் கத்துகிருனே என்று, தானும் உமது காது குளிரும்படி அவ்வப்போது சில வார்த்தைகள் சொன்னேன். நீர் பாடியதைக் கேட்டு எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது என்று நீர் நினைக்கிறீர். தான் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு நீர் அதிக மகிழ்ச்சி அடையவில்லையா, என்ன? ஆகவே, இரண்டும் சரியாகிவிட்டது. நீர் போகலாம் என்று சொல்வி, பிரபு அவனே அனுப்பி வைத்தான்.
பாகவதர் தான் ஏமாந்ததை எண்ணி வருத்தப் பட்டு வயிற்றெரிச்சலோடு பிரபுவை மனசுக்குள் ஏசியபடி போயிருப்பார்! வேறு என்ன செய்யமுடியும் பாடகல்ை ?
உலகம் பலவிதம்; மனிதர்கள் ரகம் ரகம் ! வேடிக்கை மனிதர்களின் விந்தைச் செயல்களைச் சுவையாக சொல்லும் கதைகள் ரசமானவை. அதனுல் கதை சொல்லும் கலை வெற்றிகரமான வரவேற்பைப் பெற்று வாழ்ந்து வளருகிறது என்று கூறலாம்.