பக்கம்:விடிவெள்ளி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்விக்கண்ணன் 83 ணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது தான் இது. எந்தக் காலத்துக்கும்-எந்த இடத்தில் உள்ள வருக்குக்-பொது நியதிதான் இது. చాళీ, இவம் வழுதியின் உள்ளமும் இதே சிலையில் தான் இருந்தது. கூரிய ல ளிலும்-ஒளி பொருந்திய பார்வை யைத் தன் மீது வீசித் தனக்குத் தீராத நோயை உண்டாக்கி

விட்ட அந்த அழகுக் கொடியை மறுபடியும் சந்திக்க வேண்டுமே? என்று தவித்தது அது. காலையில் அரும்பிய நோய் தான் அது பகல் எல் வாம் போதாகி வளர்ந்த அது-அவன் உன் கத்தின் வேறு உணர்ச்சித் தீயினால் கருகி மடித்தாலும் மடிந்து போயிருக்கலாம். ஆனால் காலத் தென்றால் துணை புரிந்து மறுநாள் மாலையில் மலரும் படி செய்து விட்டதே ஆற்றங்கரையில் சந்தித்த சிற்றிடைச் சிங் காரியை மறுபடியும் கோயிலுக்குச் செல்லும் வழியில் கொண்டு வந்து நிறுத்திவிட்டதே! நோய் புகுத்திவிட்ட மின்னல் பார்வை தானே நோய் தீர்க்கும் மருந்து ஆகவும் திகழ முடியும்? அவன் மனக் கொதிப்பை ஆற்றவல்ல அமுதமாக விளங்கக்கூடிய அவள் பெயரும் அமுதம் என்று தானே இனித்தது? அவன் மனம் அவளை நாடியது அவன் விழிகள் அவளைத் தேடின. அவள் யார்? எங்கே இருப்பவள்? அவளை மறு படியும் காண்பது எப்படியோ?-உணர்வின் அலைகள் ஒன்றின் பின் ஒன்றாக எழுந்து மோதின. அவன் உள்ளப்பரப்பிலே. அதன் பயனாகப் பெருமூச்சுதான் விம்மி, விம்மி வடித்தது. - யவனனிட மிருந்து அந்த அழகுப் பூங்கொடியைப் பாதுகாத்ததன் பிறகுதொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்களின் புதுமையினாலும், அவை எழுப்பிய உணர்வுத் துடிப்புகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/84&oldid=906189" இலிருந்து மீள்விக்கப்பட்டது