இவ்வாறு துணிச்சலோடும் தன்னம்பிக்கையோடும் தேனி மாசிகையை 1948 மார்ச்சில், எம். வி. வெங்கட்ராம் ஆரம்பித் தார். அவருக்குத்துணை கரிச்சான்குஞ்சு."
‘'வேலி கட்டி, எல்லே சொல்லி, இதற்குள் என்று எதற்குள்ளும் அடங்கிக் கிடக்கத் தேனி சம்மதியாது. தேனியின் கூேடித்திரம் விரிவானது. விலங்கு இல்லாத சஞ்சாரி அது. யாராலும் அதற்கு விலங்கிடவும் இயலாது. வையகத்திலும் வானத் திலும், விண்மீனிலும் வெண்ணிலவிலும், விரிகடலிலும் வீழ் அருவியிலும், மக்களிலும், விலங்குகளிலும், உருவிலும் அருவி ஆம், இருளிலும் ஒளியிலும் உள்ளிலும்- எங்கெங்கும் என்றென் றும் நிறைந்துள்ள எழிலக் கண்டு, எழிலேக் கொண்டு, எழிலே ஆக்கி, எழிலே ஆகி, என்றும் வாழவே பிறக்கிறது தேனி.
இத்தகைய பரந்த நோக்கம் கொண்டிருந்த தேனியில், கலா மோகினி கிராம ஊழியன் எழுத்தாளர்கள் பலரும் தங்கள் ஆற்றலேக் காட்டி வந்தனர். முதல் இதழிலிருந்தே க. நா. கப்ரமண்யத்தின் நாவல் ஜாதிமுத்து தொடர்கதையாகப் பிரசுரமாயிற்று. சூருவளி என்ற தலைப்பில், க. நா. சு. அவருக்குப் பிடித்தமான ராஜா, மணி என்ற நண்பர்களுக் கிடையே கலே, இலக்கியம், தத்துவம், சமூகம் பற்றி எல்லாம் சுவாரஸ்யமான உரையாடல் நடப்பதை ஒலிபரப்பிக் கொண் டிருந்தார். 16 கதைகள் எழுதிவிட்டு நீண்டகால மெளனத் தில் ஆழ்ந்திருந்த மெளனி தேனிக்காக 17-வது கதை"யை (மனக்கோலம்") எழுதிக் கொடுத்தார். லா. ச. ரா. வின் கதைகள் சிலவும் தேனியில் வந்தன.
பத்திரிகை நன்ருகத்தான் இருந்தது. தேனி. வாழும். ஏனெனில்-தமிழ் வாழும் என்று அதன் ஆசிரியர் நம்பிக்கை யோடு உறுதி கூறியிருந்த போதிலும், தேனி. ஒரு வருடமும் சில மாதங்களும் தான் உயிரோடு உலாவியது.
'வளரும் தமிழ் இலக்கியத்துக்கு நம்மால் நிறையவே 65ుu
42 / சரஸ்வதி காலம்