பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடியும் என்ற நம்பிக்கையோடும், நாமும் ஏதோ நம்மால் இயன்றதைச் செய்யவேண்டும் எனும் ஆர்வத்துடனும், அவ்வப்போது யாராவது ஒரு புது முயற்சியில் ஈடுபடுவது கால நியதி ஆகிவிட்டது.

அப்படி ஒரு உந்துதலின் மேல்தான் அ. கி. ஜயராமன், அ.கி. கோபாலன் எனும் சகோதரர்கள் காதம்பரி என்ற புதிய சிரம மான, முயற்சியை 1948 மார்ச்சில் தொடங்கிஞர்கள். இவ் விருவரும் ஜோதி நிலையம் தமிழ்ச்சுடர் நிலையம், என்ற பதிப்பகங்களே நல்ல முறையில் நடத்திக் கொண்டிருந்தார்கள். அயல்நாட்டு இலக்கிய மொழி ப்ெயர்ப்புகளையும், தமிழ்ப் படைப்பாளிகளின் எழுத்துக்களையும் வெளியிட்டுத் தமிழ்ப் பணி புரிந்து வந்தார்கள். மாதம் தோறும் ஒரு முழு நாவலையும், ஒரு தொடர்கதையையும், சில சிறு கதைகளையும் பத்திரிகை மூலம் பரப்பத் திட்டமிட்டு, காதம்பரியை ஆரம்பித்தார்கள். அதில் பிரசுரமாகும் நாவலுக்கு ஒரு பவுன் சன்மானம் அளிப்பதாகவும் அறிவித்தார்கள். இந்திய இலக்கியத்தில் வசன நடையில் சிறப்பிடம் வகிக்கும் காதம் பரி’ என்ற நூலின் பெயரையே தங்கள் பத்திரிகையின் பெய ராகத் தேர்ந்து கொண்டார்கள்.

காதம்பரி என்ற வார்த்தைக்கு சரஸ்வதி, மலர், மது, மயில் என்ற அர்த்தமும் உண்டு. காதம்பரி நாம் வழிபடும் கலே அரசியாகவும், இலக்கிய மணம் கமழும் நறுமலராகவும், கலே இன்பம் பயக்கும் மதுவாகவும், சைத்திரிகனின் வர்ண ஜாலங் களே விசும் தோகை மயிலாகவும் திகழ வேண்டும் என்பதே எமது கனவு’ என்றும் அறிவிக்கப் பட்டிருந்தது.

காதம்பரி போற்றத் தகுந்த நல்லமுயற்சியாகவே விளங்கி யது. கா. ரீ. ரீ. யின் ‘காமபாணம்’, ஆர். வி. யின் நிராசை’ புதுமைப்பித்தனின் சிற்றன்னே, பி. எஸ். ராமையாவின் 'கானல் நீர் முதலிய நாவல்கள் இதில் பிரசுரமாயின. அலெக்ஸாண்டர் குப்ரினின் ‘யாமா தி பிட்’ நாவலின் ஒரு

酉 வல்விக் கண்ணன் / 43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/49&oldid=561130" இலிருந்து மீள்விக்கப்பட்டது