எனவே, 1947 மே மாதம்-இந்தியா சுதந்திரம் அடைவதற் குச் சிலமாதங்களுக்கு முன்னர் - கிராம ஊழியன் மரணம் எய்தியது. சுதந்திரம் வந்து சேர்ந்த ஒரு மாதத்திற்குப் பிறகு, நான் சுதந்திர எழுத்தாளன் ஆக சென்னைக்கு வந்தேன்!
C
5 சாதனைகளும் சோதனைகளும்
இரண்டாவது உலக யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்த காலத் திலும் அதை ஒட்டிய சில வருடங்களிலும், காகிதக் கட்டுப் பாடு தீவிரமாக அமுல் நடத்தப்பட்டு வந்தது. புதிய பத்திரி கைகள்தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்படவில்லே.
அதல்ை, பத்திரிகை நடத்த வேண்டும் என்றுஆர்வமும் வசதி யும் துடிப்பும் பெற்றிருந்தவர்கள் சட்டத்திலிருந்து நழுவி தங் கள் காரியத்தை சாதித்துக் கொள்ள ஒரு வழி கண்டு பிடித் தார்கள். தாங்கள் வெளியிடுவதை பத்திரிகை என்று குறிப் பிடாமல், மாதம் ஒரு புத்தகம்’ என்று பிரசுரித்தார்கள்.
இதற்கு முதன் முதலாக வழி வகுத்துக் கொடுத்தவர் திரு. ஏ. கே. செட்டியார் அவர்கள். உலகம் சுற்றும் தமிழன்’ என்று ஒரு புத்தகம் எழுதி, அந்தப் பெயராலேயே அறிமுகப்படுத்தப் பெறும் தகுதியை அடைந்து இருந்த அவர் குமரி மலர்' என்ற *மாதம் ஒரு புத்தக த்தை ஆரம்பித்தார். அதைப் பின் பற்றி ஏகப்பட்ட புத்தகங்கள் தோன்றின. கதை மலர், கலை மலர், கதைக்கொடி, தமிழ் மலர் என்று என்னென்னவோ பெயரைச் சூடிக் கொண்டு மாதம் ஒரு பிரசவம் பத்திரிகைச் சந்தையில் 'கலகலெனப் பொலபொலென வந்து சாடியது.
இவற்றில் பெரும்பாலானவை வெறும் ஆர்வத்தின் விளேவு
D வல்லிக் கண்ணன் / 35