ஆளுல் கதைக்காகவே தனிப் பத்திரிகை என்ற நோக்கு போயே போய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும். நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் விழிப்பும், புதிய புதிய விஷ யங்களே, அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவாவும் பெரும் பான்மையோசின் ரசனேயுமே அதற்குக் காரணம் ஆகும். ‘மணிக்கொடி"க்குப் பிறகு, க. நா. சுப்ரமண்யம் தொடங்கி, "மணிக்கொடி எழுத்தாளர்களின் ஓரளவு ஒத்துழைப்புடன் நடத்திய "சூருவளி இந்தப் போக்கை நன்கு பிரதிபலித்தது.
(C
2. சூளுவனரீ
"மணிக்கொடி சென்று தேய்த்து இறுதல்’ என்பது போன்ற ஒரு நிலயில் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, சூரு வளி'யும் தோன்றியது, சென்னை மவுண்ட் ரோடில்.
எத்தப் பத்திரிகையும் தனது அவதார மகிமை பற்றியும், தன்னுடைய லட்சியம் கொள்கைகள் குறித்தும் முதல் இதழில் எடுப்பாக எழுதுவது வழக்கம். அப்புறம், அவ்வப் போது தனது வெற்றிகள், சாதனைகள் பற்றி நாவலிப்பதும் பத்திரிகை நியதிதான்.
ஆனுல் சூருவளி தன்னைப் பற்றி முதல் இதழில் எதுவுமே பேசவில்லை. அது மட்டுமல்ல. இறுதிவரை எந்த ஒரு இத ழிலும் சுயபேரிகை கொட்டிக் கொள்ளவும் இல்லை.
எனினும் தொடர்ந்து ஒரு விளம்பரத்தை அட்டையில் பிர சுரித்து வந்தது
"சாசுவத சொத்து
உங்களுடைய சந்ததியாருக்கு நீங்கள் எவ்வளவு தனம் சேமித்து வைத்திருந்தாலும் உங்களுடைய ஞாபகம் என்றென் றும் பசுமையாயிருக்க அது போதாது.
6/ சரஸ்வதி காலம் 口