பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக் காலத்தில் (1937-38 வாக்கில்) பார்த தேவி ஒரு சோதனை முயற்சி செய்து பார்த்தது. வ. ரா. வை ஆசிரியராகக் கொண்டு, ‘விகடன் அளவில், ஒரு வாரப்பதிப்பும் வெளியிட் டது அந்த தினசரி. அது பிசினஸ் வெற்றியும் இல்லை; குறிப் பிடத் தகுந்த சாதனையாகவும் விளங்கவில்லை. வ. ரா. வின் கட்டுரைகள் அதிகமாக வந்தன. ஆளுக்குள்ளே ஆளு எத்தனையோ ஆளு!’ என்ற தலைப்பில், மனித இயல்புகள் குறித்து அவர் எழுதி வந்தது சுவையாக இருந்தது. அக்கால கட்டத்தில், செல்லப்பாவின் எழுத்துகளும் அப்பத்திரிகையில் நிறைய வந்தன. பிறகு, அவர் கலைமக'ளில் எப்போதாவது எழுதிக் கொண்டிருந்தார். சூருவளிக்கும், பின்னர் தோன்றிய *இளைய தமிழர்களின் லட்சிய முயற்சிகளுக்கும் அந் நாட் களில், சி. சு. செ. ஆதரவோ, ஆசியோ வழங்கியதாகச் சொல்வதற்கில்லே. அனேத்தும் அர்த்தமற்றனவாகவும் சிறு பிள்ளேத்தனங்களாகவும் அன்று அவருக்குத் தோன்றின போலும்!

‘சந்திரோதயம் வந்த பிறகு தான் அவர் புது வேகத்தோடும் அனுபவ விசாலத்தோடும் எழுதுவதில் உற்சாகம் காட்டலா ஞர். தேர்ந்தெடுத்த உலகத்துச் சிறுகதைகளைத் தமிழாக்கி வந்தார்.

க. நா. சுப்ரமண்யம் நாவல்கள் சில இப்பத்திரிகையில் தொடர் கதைகளாகப் பிரசுரம் பெற்றன. பரபரப்பு ஊட்டு வதற்காக அவர் நடராஜன் பேட்டி காண்கிருர் என்ருெரு பகுதியை எழுதிக் கொண்டிருந்தார். அவருக்குப் பிடிக்காத பத்திரிகாசிரியர், பதிப்பகத்தார் வகையராவைப் பரிகசிப்பதே இதன் முக்கிய நோக்கம். இந்த வகையில் குருக்களப்யா "பாதி நிலையம் சிவராமன் போன்ற சில பேட்டிகள் ரசமாக இருந்தன. நடராஜன் நடராஜனேயே பேட்டி கண்டதோடு இந்த விவகாரம் தீர்ந்து விட்டது. மொத்தம் நான்கோ ஐந்தோ தான் வந்தன.

[孺 - வல்லிக் கண்ணன், 39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/45&oldid=561126" இலிருந்து மீள்விக்கப்பட்டது