# 3 வசந்தம் மலர்ந்தது ஊரின் ஒரு மூலையிலே ஒளி வீச்சு தெரிந்தது திடீரென்று. அந்தப் பக்கம் பூராவும் ஒளிப்பிரவாகம். வானே அளாவும் ஒளிப் பாய்ச்சல். 'சிவன் கோயில் தெருவிலே எங்கோ தீப்பிடித்துவிட்டது போல் தெரியுது” என்ருர் ஒருவர். அவர் குறி தவறவில்லை. ஊர் மூலையிலே ஒளி வீச்சும் ஒலிக் கும்பலும் எழுந்து கலந்தன. தீ. தீ என்ற சப்தம் பெருங்கூச்சலிடையே தெளிவாகக் கேட்டது. ஊர்வலம் நின்றுவிட்டது. நாதஸ்வரம் ஒடுங்கியது. திகர்ச் சக்தி எதுவோ கட்டுப்படுத்தி விட்டதுபோல அந்த அலங்கார, படாடோப அசைவு அப்படியே ஸ்தம்பித்து விட்டது. ஊர்வலத்திலிருந்து சிலர் ஓடினர். பலர் வேக நடை தடத்தினர்! தீ பிரமாதமாகக் கிளம்பி எழுந்து தாவுவதாகத்தான் தெரிந்தது. எங்கே? யார் வீட்டில் தீ?-இதே கேள்வி, வாய் திறந்து கேளாதவர் நெஞ்சத்தில் இதே உதைப்பு. எல்லோரையும் "ஆங்" என்று அலர வைத்தது ஓடிவந்த ஒருவனின் பேச்சு: "கல்யாண வீட்டுப் பந்தல் தீப்பற்றிக் கொண்டது. பெரிய தீ! அவ்வளவுதான். எல்லோரும் விழுந்தடித்து ஓடினர்கள் சிவன் கோயில் தெரு நோக்கி. ஆமைபோல் ஊர்ந்த கார் வெறிகொண்ட மாடு மாதிரிப் பாய்ந்து திரும்பியது. வாண வெடிக்காரர்கள் போன இடம் தெரியவில்லை, பொய்க் குதிரையையும், ஆலி பொம்மையையும் ஒருவீட்டுத்திண்ணை யிலே போட்டுவிட்டு விழுந்தடித்து விரைந்தார்கள் ஆட்டக் காரர்கள். லேட்டுக்காரர்களும் திரும்பினர். உயரமாகப் போட்டிருந்த கொட்டகைப் பந்தல் நின்று அசிந்தது மூங்கில் சட்-சடார்’ என்று வெடித்து எரிந்தது.
பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/13
Appearance