பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரபல எழுத்தாளர்களின் கதைகள், கட்டுரைகளை வாங்கிப் பிரசுரித்தது. பிற்காலத்தில், புதிய - சொந்த மான - படைப்புகள் தேவையில்லை என்று கருதி விட்டது. பழைய, அபூர்வமான, விஷயங்களைத் தேடி எடுத்து மறு பிரசுரம்' செய்வதற்கே அதன் பக்கங்களை ஈடுபடுத்தியது. பழங்காலப் பத்திரிகைகளில் வந்த அரிய செய்திகள், அபூர்வமான நூல்களில் வந்த முன்னுரைகள் - கட்டுரைகள், ஆனந்த ரங்கம் பிள்ளை டயரிக் குறிப்புகள், ராஜாஜியின் எழுத்துக்கள், காந்திஜி கருத்துக்கள், அறிஞர்கள் ஞானிகளின் பொன்மொழிகள் முதலியனவே குமரி மலர்' உள்ளடக்கம் ஆயின. 1980 களின் ஆரம்பத்தில் - ஏ. கே. செட்டியார் மரணம் அடைந்த பிறகும் சிறிது காலம் வெளி வந்து, பின் அது நின்று விட்டது.

கால ஓட்டத்தில் மாதம் ஒரு புத்தகம்’ என்பது

வேறொரு பரிணாமம் பெற்றது. அதைப் பற்றி பின்னால் விரிவாகக் கவனிக்கலாம்.

ജു

●%SP

வாசகர்களும் விமர்சகர்களும் 77