பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் 81

நெய்வேலியில் பணிபுரியும் கி. அ. சச்சிதானந்தம் செல்லப்பாவுக்கு வேண்டிய நெருங்கிய நண்பர். 'எழுத்து' காலத்திலேயே பொருளாதார உதவி செய்தவர், பீக்காக் பப்ளிகேஷன்ஸ் என்று மெளனி கதைகளை வெளியிட்டவர். சி. சு. செயின் ஜீவனாம்சம், தமிழ் சிறுகதை பிறக்கிறது இவற்றை இரண்டாம் பதிப்பாக 1988ல் வெளியிட்டார். இப்போது மணிக்கொடி சிறுகதை முதல்வர்கள் (சி.சு.செ) சீதை-(ராஜம் அய்யர் எழுதியது) என்ற 2 புத்தகங்களை பிரசுரித்திருக்கிறார். வாங்கியிருப்பீர்கள் என எண்ணுகிறேன்.

சிறுபத்திரிகைகள் புதுசு.புதுசாகத் தோன்றுகின்றன. எண்ணிக்கை மிகுதிதான். தரம், புதிய விஷயங்கள், புதிய பார்வை புதிய சிந்தனை பற்றி யாரும் அக்கறை கொள்வதில்லை.

- அன்பு

&l. &,

சென்னை.

霹0-雳2-究》 அன்பு மிக்க இராமலிங்கம்,

வணக்கம். உங்கள் 30-11-90 கடிதம் கிடைத்தது. காலம் பயங்கர வேகத்தில் ஒடுகிறது! நினைத்ததை நினைத்த தருணத்தில் செய்ய முடியாமல் போகிறது. நான் நலம். என் அண்ணாவும் குடும்பத்தாரும் சுகம். தி.க.சி திருநெல்வேலியில் நலமாக இருக்கிறார். பத்திரிகைகள், புத்தகங்கள் படிப்பது, கடிதங்கள் எழுதுவது, நண்பர்களை சந்தித்துப் பேசவது ஆகிய வழக்கமான காரியங்களை செய்து கொண்டிருக்கிறார். வண்ணதாசன், தூத்துக்குடியில், வழக்கம்போல் வேலை பார்த்து வருகிறார். உடல்நிலை நன்றாக இருக்கிறது. நீங்களும் மனைவியும் மகனும் நலம் என அறிந்து மகிழ்கிறேன். கல்குதிரை விநியோகப் பொறுப்பை மட்டுமல்லாது, அதன் தயாரிப்புச் செலவையே நீங்களும் வேர்கள் நண்பர்களும் தான் ஏற்றுக்கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. நல்ல காரியத்துக்குஉருப்படியான பணிக்கு-ஏதோ சொல்வார்களே, உடல்பொருள்-ஆவியை செலவளித்து என்று - அப்படி பலவகையிலும் உற்சாகத்தோடு ஒத்துழைப்பதை வாழ்த்துகிறேன். -

படித்த புத்தகங்கள் பற்றி கேட்டிருக்கிறீர்கள். தமிழ் நாட்டில், தினசரி, ஏகப்பட்ட புத்தகங்கள் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றில்