鬱 வீடும் வெளியும் தீயிட்டாள்கள். முதலாளி கடை முன்னே குடத்தைப் போட்டுடைத்தான் ஒருவன். "அந்நிய ஆட்சி அடியோடு ஒழிக. மல் விற்கும். ஆண்டுகங்கள் கூண்டோடு தொலைக!” என்று ஒருவன் கவிஞன். - அப்போதுதான் இது மறியலைச் சேர்ந்த ஒரு. நாடகம் என்பது அனைவருக்கும் புரிந்தது. பிணமாகக் கிடத்தப்பட்டிருந்தது, உயர்ந்த ரக மல் யினுல் உருவாக்கப் பெற்ற ஒரு உருவம்தான். ராஜப்பிரதிநிதியின் (வைசிராய்) பொம்மை அது. அதன்மேல் அந்நிய ஆதிக்கம் என்ற சிவப்பு எழுத்துக் காணப்பட்டது. அந்த உருவம் மட்டுமே எரியவில்லை. சுற்றிலும் நின்த பலரும் தங்கள் சட்டைகள் துணிகளை எடுத்து தலையைச் சுற்றி, தீயில் வீசினர்கள். பள்ளியிலிருந்து திரும்பி மாணவர்களில் அநேகர் தங்கள் சட்டை களையும் கழற்றித் தீயில் போட்டார்கள். பற்றி எரிந்த சொக்கப்பனே எல்லோருக்கும். உற்சாக மூட்டியது. r அவர்களுடைய உற்சாகத்தை விரட்டி அடிக்க வந்ததுபோல், கண்மூடித்தனமாகத் தடிகளைச் சுழற்றிக் கொண்டு தி.மு.தி.மு வென்று பிரவேசித்தார்கள் போலீஸ் காரர்கள். தலை, தோள்பட்டை, முகம், முதுகு என்று: பாராமல் மறியல் செய்த தொண்டர்களேயும் கும்பலில் நின்றவர்களேயும் அடித்து நொறுக்கினர்கள். கும்பல் செறிந்து காணப்பட்ட கடைவீதி ஒரு சில திமிஷங்களிலேயே வெறிச்சோடி விட்டது. ரத்தமும் அழுகையும் கலந்து தே ன் நி ய அக் களத்தில். மூங்கில் கழிகளும் உடைந்த குடமும் எரியும் தீயும் கடுகாட்டுச் சாயலைச் சேர்த்தன. ஆண் என்றும் பெண் என்றும் பெரியவர் என்றும் சிறுவர் என்றும் பாராது வெறித்தனமாக அடித்து ஆனந்தம் கண்ட போலீஸ்காரர்கள் சில பேரை இழுத்து,
பக்கம்:வீடும் வெளியும்.pdf/9
Appearance