பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்கங்களைப் புரட்டி, கல்கியின் கதையை அங்கேயே நின்று வாசகர்கள் படிக்கிற காட்சி அந்நாட்களில்

வழக்கமாகி விட்ட ஒரு நிகழ்ச்சியாக இருந்தது.

இந்நாட்களைப் போல பஸ் போக்குவரத்து பரவலாக எங்கும் பெருகியிராத காலம் அது, பஸ் வசதி கொஞ்சம் கூடப் பெற்றிராத ஊர்களே மிகுதி. ரயில் தொடர்பும் குறைவு. அப்படிப்பட்ட சிறு கிராமங்களில் வசித்தவர்களில் படிக்கும் ஆர்வம் உடைய வாசகர்கள் ஆனந்த விகடனை வாசம் தோறும் தேடி வாங்கி படித்த வர்கள் பல மைல்களை நடந்துகடத்தி: பக்கத்து நகருக்குப் போய் விகடன் வாங்கிக் கொண்டு, திரும்பி வருகிற வழியில் ஒரு இடத்தில் அமர்ந்து கல்கியின் கதைகளைப் படித்து மகிழ்ந்தார்கன்.

இதெல்லாம் 1930களின் பிற்பாதியில் நடந்தவை. சுலபமாக விளங்கிக் கொள்ளக்கூடிய சிரிப்பு உண்டாக்குகிற- இனி என்ன நடக்கும் என்று ஆவலைத் துண்டக் கூடிய விதத்திலே அமைந்த, விறுவிறுப்பான, இனிமையான, மனசுக்குப் பிடித்த, கதைச்சுவை நிறைந்த எழுத்துக்களை விரும்பி வரவேற்பதில் வாசகர்கள் என்றுமே நாட்டம் உடையவர்கள் தான்.

வாழ்க்கையின் மேலோட்டமான விஷயங்களைக் கொண்டு கதை பண்ணுகிற முயற்சிகளை- முடிவிலே எப்போதும் இன்பம்’ என்ற தத்துவத்தை வலியுறுத்துகிற கதைகளை ஆதரிக்காத போக்கு ஒன்று உண்டு. வாழ்க் கையைக் கூர்ந்து கவனித்து, தனிமனித உணர்வுகளையும்

இ வாசகர்களும் விமர்சகர்களும் 20