பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விமர்சகர்களில் க. நா. சுப்ரமண்யமும் ஒருவர். எழுத்தின் தரம்உயர வேண்டும் என்றும் கூறி வருகிறார் அவர். க. நா. சு. வின் விமர்சனக் குரல் 1980 களில் மீண்டும் தமிழ்ப் பத்திரிகைகளில் ஒலித்து வருகிறது. எதிர்ப்புகளையும் குறைகூறல்களையும், கண் டனங்களையும் தாக்குதல்களையும் ஏற்றுக் கொண்டு அவர் ஓயாது தனது விமர்சகக் கருத்துக்களை, சமயம் கிடைக்கும் போதெல்லாம், கிடைக்கிற இடத்தில் எல்லாம், துணிந்து கூறிக் கொண்டிருக்கிறார்.

அவருடைய இந்தக் குணத்தைப் பாராட்டலாம். ஆயினும், முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களையும், தனது அபிப்பிராயங்களையே மறுக்கின்ற கூற்றுக் களையும், குழப்பமயமான சிந்தனைகளையும் க. நா. சு. தனது விமர்சனக் கட்டுரைகளில் அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறார். இது அவருடைய விமர்சனத் திறனைக் களங்கப்படுத்தும் குறையேயாகும்.

நம்பிக்கை தரும், நேர்மையான, திறமையும் இலக்கிய நோக்கும் கொண்ட விமர்சகராக என். ஆர். தாசன் 1980 களில் தெரிய வந்திருக்கிறார். 1920 முதல் 1940 வரையிலான சிறுகதை எழுத்தாளர்களின் படைப்புகளை ஆய்வு செய்யும் மூன்று பார்வைகள்' என்ற நூலில் அவர் எழுதியுள்ள விமர்சனக் கருத்துக் களும், கு. அழகிரிசாமியின் படைப்புகள்’ என்ற விமர்சன துலும் தாசனின் திறமைக்கும், நேர்மைக்கும், உண்மை உழைப்புக்கும் சரியான எடுத்துக்காட்டுகள் ஆகும்.

இந்த விதமான விமர்சன முயற்சிகள் தமிழில்

அதிகம் தோன்ற வேண்டும்.

இ வாசகர்களும் விமர்சகர்களும் 168