உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ வல்லிக்கண்ணன்

3

தி.க.சி கடிதம் எழுதியிருந்தார். உங்களுக்கு டயபடீஸ் நோய் இருப்பதாக தெரிவித்தீர்கள் என்று. வருத்தம். எனினும், மருத்துவ வசதிகள் முன்னேறியுள்ள நாட்களில் நோய் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை தான். கொஞ்சம் கட்டுப்பாடுகளை அனுஷ்டிக்க வேண்டியிருக்கும்.

நெடுகிலும் நண்பர்களை சந்தித்துப் பேசியது மிகுந்த உற்சாகம் தந்தது. நல்ல இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட ரசிகர்கள் ஒன்றிரண்டு பேர் எங்கும் இருக்கிறார்கள். படித்து, ரசித்து, நினைவு வைத்து, சமயம் கிடைக்கிற போது நயங்களை எடுத்துச் சொல்லி மகிழ்கிற இயல்பினர். உங்கள் நாவல்கள் பற்றியும், சினிமா உலக அனுபவங்கள் குறித்து நீங்கள் எழுதிய கட்டுரைகள் குறித்தும் சொன்னார்கள்.

ராஜநாராயணனுக்கு இப்போது பிரகாசமான காலம். ஜூனியர் விகடனில் அவர் எழுதிய கட்டுரைகளுக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து, ஆனந்தவிகடன் அவருடைய கோபல்லபுரத்து மக்கள் கதையை தொடராக வெளியிட்டு வருகிறது. டி.வியில் ஒளிபரப்புவதற்காக யார் யாரோ அவரை அணுகி, 13 கதைகள் வாங்கிப் போனார்களாம். 13,000 ரூபாய் கிடைத்தது. இப்போது பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், தனியாக 'நாடோடி இலக்கியம்-மக்கள் கலைத்துறை என்று ஒரு பிரிவு ஏற்படுத்தி, இவரை தலைவராக்க முன் வந்துள்ளது. மாதம் 4000 ரூபாய் சம்பளம். ஜூன் மாதம் முதல் அவர் பொறுப்பு ஏற்பார். ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு இப்படி எல்லாம் வாய்ப்புகள் தாமாகவே தேடி வருவது என்பது சந்தோஷமான விஷயம் தான்.

அன்பு

öy . & .

ராஜவல்லிபுரம். 18-5-92

அன்புமிக்க நண்பர் அவர்களுக்கு,

வணக்கம். நான் 8-ம் தேதி திருநெல்வேலி சேர்ந்தேன். தி.க.சி. வீட்டில் தங்கியிருந்த போது, தற்செயலாக திரு. பாக்கியமுத்துவும் திருமதி: சரோஜினி பாக்கியமுத்துவும் வந்தார்கள். மேலரதவீதியில் தான் 'நண்பர் வட்டம் அச்சாகும் பிரஸ் இருக்கிறது. அங்கே வந்தவர்கள் திகசியைப் பார்க்க வந்தார்கள் என்னையும் கண்டு பேச ஒரு வாய்ப்பு