38★வல்லிக்கண்ணன்
"சங்கதி தெரியுமா, அக்கா? அந்த மூணாம் வீட்டிலே ஒரு பிள்ளையாண்டான் இருப்பானே, எப்ப பார்த்தாலும் வராந்தாவிலே உட்கார்ந்து, வழியோடு யாரு போறா, யாரு வாறான்னு முழிச்சுக்கிட்டிருப்பானே அந்த ஆந்தைப் பையன் அடுத்த தெருவிலே இருக்கிற ஒருத்தியைக் கூட்டிக்கிட்டு எங்கேயோ போயிட்டானாம். அவனும், அவன் கூட ஆபீசிலே வேலை பார்க்கிற பொன்னும்தான் அப்படிப் போயிருக்காம், ரெண்டு பேருக்கும் என்னவோ சொல் நாளே, இப்ப எங்கே பார்த்தாலும் அதாத்தானே இருக்கு- காதலா?. ஆங் காதல், அது ஏற்பட்டு வளர்ந்து வந்ததாம். பொண்ணு வீட்டிலே கண்டிச்சாங்களாம். அதனாலே ரெண்டு பேரும் ஒத்துப் பேசி எங்கேயோ போயிட்டாங்க... பரவாயில்லே, ரெண்டு பேரும் சம்பாதிக்கி நாங்க கல்யாணம் செய்துக்கிட்டு குடும்பம் நடத்துவாங்க!"
காஞ்சனாவின் உள்ளத்திலே ஊற்றெடுத்துப் பெருகிய உற்சாகம் பல நூறு மணிகளின் 'ஙணஙண'ப்பு களாய்ச் சிதறி வெடித்தது. சிரிப்பின் வடிவிலே.
"வேணும், இந்த வசந்தாக் குரங்குக்கு நல்லா வேனும். இப்போ அவ மூஞ்சியைப் பார்க்கணுமே?" என்று அவள் மனம் பேசியது.
இந்த உற்சாக வெள்ளம் அவளுடைய ஏமாற்றத்தையும் தோல்வியையும் இருந்த இடம் தெரியாமல் அடித்துச் சென்றுவிட்டது. தான் 'ஷேம்' போட்டதையும், அவளுடைய 'சண்டைக்காரி என்பதையும் மறந்து விட்டு, தோழியைக் கண்டு களிக்கும் ஆவல் உந்த, வசந்தாவின் வீடு நோக்கி நடந்தாள் காஞ்சனா!
★ 'தினமணி கதிர்' 24-4-70.