14 0 வல்லிக்கண்ணன் ‘என்ன! மாண்புமிக்கவர்களை சந்திக்க இயலவில்லை. முக்கியமான மந்திரி தலைநகரில் இல்லை. அவர் ரொம்ப பிளி, ரொம்ப ரொம்ப பிளி. ஏகப்பட்ட திறப்பு விழாக்கள்; எங்கெங்கோ மாநாடுகள்! எண்ணிலாச் சொற்பொழிவுகள்: அவருக்கு ஒய்வே கிடையாது. சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவரிடம் தம்ம மனுவையும் கொடுத்து வைத்தோம். உரிய காலத்தில் பதில் வரும் என்று சொன்னார்கள் என்றார் ஒருண். ‘இன்னும் ஒன்றும் தெரிந்து கொண்டோம். கட்சிக்குப் பெரும் பலமாக இருந்து வருகிற பெரும் பணக்காரர் இந்தத் தொழிற்சாலையில் மேஜர் ஷேர் வைத்திருக்கிறார். அந்தப் பங்குதாரரே மத்திரி சபையிலும் பங்கு பெறத் தீவிர முயற்சி கன் செய்து வருகிறார் என்று செய்திகள் கூறினார் இன்னொருவர். திருவாளர் அனுபவம் கர்வம்ாகச் சிசிக்கவில்லை. நடை முறை உலகத்திலே பணத்துக்குத்தான் எப்பவும் வெற்றி. இது தெரிந்த சங்கதி ஆச்சுதே' என்றுதான் முணுமுணுத்தார். "மாண்டேஜ் ஷாட்" மூன்றாவது பேரிய கில்லன் மிடுக்காக எழுந்து நின்று. ஏகப்பட்ட புகை கக்கலாயிற்று. அதன் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றபோது, உரிய முறையில் அதை இயக்கி வைத்த புதிய மந்திரி (அந்த ஆலையில் பெரும் பங்குகளுக்கு உரிமையாளர்) அந்த ஆலையின் சேவையையும், அதன் அதிபர்களின் ப்ரோபகாரத் தையும் நாட்டுக்கும் அரசுக்கும் அவர்கள் ஆற்றிவரும் தொண்டையும் அதிகம் பாராட்டிப் பேசினார். சிவபுரம் மீதும், சுற்றியுள்ள கிராமங்கள் மீதும், வயல் வெளிகள் மீதும், எங்கும் எப்போதும் இருள் மேகம் மாதிரி சிமிண்டுப் புகை கவிந்து தொங்கியது.
பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/16
Appearance